“ஏழைக் குடும்பத்தில் பிறந்த ஒருவன் உலக வரலாற்றிலேயே முதல் முறையாக சக்ரவர்த்தியானான்!
வெடிக்கும் விபரீதத்தைக் கண்டுபிடித்த ஆதங்கத்துடன் வாழ்ந்து மறைந்த விஞ்ஞானி!
இரண்டு கொலையினால் மூண்ட முதல் உலகப் போர்!
தன் தூரிகை கொண்டு இரண்டாவது முறை ஆதாமிற்கு உயிர் கொடுத்த ஒப்பில்லா ஓவியன்!
அடிமைகளின் விடுதலைக்காகவே போராடி உயிர் நீத்த அடிமைகளின் ரட்சகன்!
பாக்டீரியாக்களை வதம் செய்ய தனது உடலையே ஆய்வுக் கூடமாக மாற்றிய ஆராய்ச்சியாளர்!
மக்களை நடுநடுங்கச் செய்த பறக்கும் தட்டுகள்!”
இன்னும்… இன்னும்… பல தகவல்களுடன்…
கடந்த நூறு ஆண்டுகளில் உலகில் நிகழ்ந்த சில முக்கிய சரித்திர நிகழ்வுகளைத் தொகுத்து எழுதப்பட்ட ஒரு வரலாற்றுத் தொடர் “வாவ் 2000”. ஆண்டுகள் கால வரிசைப்படி(1900-2000) அமைந்து படிப்பவர்களுக்கு எளிமையாகவும் மனதில் வைத்துக்கொள்ள ஏதுவாகவும் அமைந்திருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு. திருப்பும் பக்கத்திற்கெல்லாம் ஒவ்வொரு வருடத்தைக் கடந்து செல்வதாக உணர முடியும். சரித்திர நிகழ்வுகளைத் தாண்டி மேதைகள், விஞ்ஞானிகள் மற்றும் சில முக்கியமான பிரபலங்கள் பிறந்த வருடம், மறைந்த வருடம் போன்றவையும், அரிதான சில கண்டுபிடிப்புகள் போன்றவையும், அந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டங்கள் போன்றவையும் தொகுக்கப்பட்டுள்ளது பொது அறிவை வளர்ப்பதற்கான ஒரு புதிய முயற்சி.
பிரபலமானவர்களால் மட்டுமே உருவாக்கப்படுவது அல்ல சரித்திரம்! அதில் சாதாரண குடிமக்களின் பங்கு அதிகம் உள்ளது. சாதாரண குடிமக்கள் மட்டும் இல்லையெனில் இந்த சரித்திரமே இருந்திருக்காது! என்பதைக் கருத்தில் கொண்டு மிக நுட்பமாக வேல்ஸ் அவர்களால் எழுதப்பட்டது இப்புத்தகம்.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #vikatan publications #wow 2000 #vels #information #world #history #competitive exam #tnpsc
Leave a Reply