“விசித்திர நிகழ்வுகளும், வினோத மனிதர்களும் இருக்கும் வரை உலகம் ஏதோ ஒரு இடத்தில் பாவங்களையும் குற்றங்களையும் சுமந்து கொண்டு தான் இருக்கும்..”
விஷ்ணு ஸ்தலத்திற்கு வந்த பிறகு விவேக்குடன் சேர்ந்து அந்த பயலாஜிகல் மியூசியத்திற்குள் இருவரும் நுழைந்த போது, அங்கு கமிஷனர், மியூசியத்தின் டைரக்டர், ஃபாரன்ஸிக் ஆபீசர் மற்றும் டாக்டர் ஆகியோர் அரைவட்ட மேசையில் அமர்ந்திருந்தனர். அவர்களின் இறுகிய முகத்தைக் கண்ட விவேக்கிற்கு விசயத்தின் தீவிரம் புரிந்தது. மியூசியத்தின் ஸ்பெசிமேன்ஸ் வைக்கப்படிருந்த அறைக்குள் புதிதாக வைக்கப்பட்டிருந்த ஒரு மனித மூளை இருந்த ஜாடியில் ஏழாம் அறிவு என எழுதப்பட்டு புத்தம் புதியதாய் கொய்த மூளையாக அது இருந்தது. கொலை செய்து வெட்டியெடுக்கப்பட்ட ஒரு ஆணின் தலையிலிருந்து எடுக்கப்பட்ட மூளை என்று போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் தெரிய வருகிறது.
கேஸ் இருட்டுக்குள் இருப்பதை உணர்ந்த விவேக் மேற்கொண்டு கேஸை அணுகும் முன் சில தகவல்களைத் திரட்டிக் கொண்டிருந்தான். கேஸின் ஒரு பக்கம் புரிய ஆரம்பித்த நிலையில், ஃபாரஸ்ட் காலேஜில் கிடைத்தது இன்னொரு மனித மூளை. ஆழம் தெரியாமல் காலை வைத்துவிட்டோம் என விஷ்ணு புலம்பிக்கொண்டிருந்த நேரத்தில், விவேக்கிற்கு ஒரு பொறி தட்ட கேஸை வேறொரு கோணத்திலிருந்து விசாரணை செய்கிறான். கேஸில் பாதிக் கிணற்றைத் தாண்டியிருந்த விவேக்கிற்கு இடையில் ஒரு உண்மை தெரியவர கதையின் போக்கே இந்த இடத்தில் மாறுகிறது.
கொலையாளி யார்? கொலையாளின் நோக்கம் போலீசை திசை திருப்புவதா? அந்த இரு மூளைகளுக்கும் சொந்தக்காரர் யார்? விவேக்கையே திணறடித்த கேஸான ஜாடியில் உள்ள மூளை என பரபரப்பான சூழலில் கதை நகர்ந்து படிப்பவர்களுக்கு மனதில் கிலியை ஏற்படுத்தும்.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #ezhavadhu arivu #seventh sense
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=200
I need this book. If you can share this.