- இந்த நாட்டின் தலைநகர் வார்சா.
- அதிக பறவை சரணாலயங்கள் உள்ள நாடு.
- தேசியச் சின்னம் வெள்ளைக் கழுகு.
- உருளைக்கிழங்கு, கோதுமை, பழங்கள், காய்கறிகள் போன்றவை அதிகம் விளைவதால் எதிர்காலத்தில் ‘ஐரோப்பாவின் தானியக் கூடை’ ஆக இந்த நாடு இருக்கும் என்கிறார்கள்.
- தேசியக் கொடியின் மேல் பாதி வெள்ளையாகவும், கீழ்ப் பாதி சிவப்பாகவும் இருக்கும்.
- இந்தக் கண்டத்தின் அதிக எடை கொண்ட விலங்காக ஐரோப்பிய எருது உள்ளது.
- பொலோனியம், ரேடியம் என்ற இரு தனிமங்களைக் கண்டறிந்து, இரண்டு நோபல் பரிசுகளைப் பெற்ற விஞ்ஞானி மேரி க்யூரி இந்நாட்டைச் சேர்ந்தவர்.
- இந்த நாட்டில் தான் மேம்படுத்தப்பட்ட மண்ணெண்ணெய் விளக்கு மற்றும் குண்டு துளைக்காத ஆடைகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன.
- ஐரோப்பாவில் உள்ள இந்த நாட்டின் மேற்கில் ஜெர்மனியும் தெற்கில் செக் குடியரசும் அமைந்துள்ளன.
- இந்த நாட்டில் சுமார் 10,000 ஏரிகள் உள்ளன.

இந்தப் பத்து கேள்விகளும் ஒரு நாட்டைக் குறிக்குது. முடிஞ்சா கண்டுபிடிங்க! முடியாதவங்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க!!

கமெண்ட்ல உங்க பதிலைப் போடுங்க..
மேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #challenge #general knowledge #quiz
சரியான விடை – போலந்து
Correct Answer – Poland