அனுபிஸ் மர்மம்

வரலாற்றின் பழமையான பொருள்கள் மீது ஆர்வம் கொண்ட நீலமணி சன்யாலுக்கு வந்தது ஓவிய வடிவ எழுத்துக்களாலான ஒரு கடிதம். அதில் உள்ள குறியீடுகளைப் புரிந்துகொள்ள முடியாததால் ஃபெலுடாவின் உதவி நாடுகிறார், சன்யால். அவருடைய அழைப்பை ஏற்று வீட்டிற்கு சென்ற ஃபெலு பாபு அது எகிப்து முறைப்படி எழுதப்பட்ட ஒரு மிரட்டல் கடிதம் என்பதைக் கண்டுபிடிக்கிறார். மேலும் நீலமணி பாபு ஏலத்தில் புதிதாக வாங்கிய எகிப்து கடவுளான அனுபிஸ் என்ற சிலையை ஃபெலுடாவிடம் காட்ட, சிலைக்காக ஒருவேளை மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் அணுகுகிறார், ஃபெலு.

அடுத்த நாளே அனுபிஸ் சிலையை நீலமணி வீட்டிலிருந்து மர்ம நபர்  திருடிவிட்டு அவரையும் கட்டிபோட்டு விட்டு செல்கின்றனர். அந்த அனுபிஸ் சிலையை ஏலத்தில் வாங்க பிரதுல் தத்தா என்பவரும் சன்யாலுடன் போட்டி போட்ட உண்மை ஃபெலுவிற்குத் தெரியவருகிறது. சந்தேகப் புள்ளியை அவர் மீது வைத்து அவரை வேவு பார்க்க வயதானவரைப் போல மாறுவேடத்தில் செல்கிறார்கள் ஃபெலுவும் தொப்ஷேவும். இருவரும் தத்தா வீட்டிற்கு சென்று திரும்பிய மறுநாளே தத்தாவின் வீட்டிலிருந்தும் புராதன பொருள்கள் சிலவற்றை ஒரு மர்ம நபர் திருடிவிட்டு மறைகிறான்.

குழப்பத்தில் ஆழ்ந்திருந்த ஃபெலுடா மர்மக் கொள்ளைக்காரனைக் கண்டறிந்தாரா? அனுபிஸ் மர்மம் அவிழ்க்கப்பட்டதா? சித்திர எழுத்து வடிவிலான மிரட்டல் கடிதத்தை எழுதியது யார்? தத்தா வீட்டிலிருந்து திரும்பும்போது ஃபெலுவிற்குக் கிடைத்த தடயம் என்ன? சுவாரஸ்யமான தகவல்களுடன் சுறுசுறுவென கதை நகரும்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #satyajit ray #feluda #anupis marmam

want to buy : https://www.commonfolks.in/books/d/anupis-marmam

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: