மகாராஜாவின் மோதிரம்

பயணம் செய்வது  பலருக்குப் பிடித்த ஒரு செயல். அப்படியான லக்னோவை நோக்கிய பயணத்தின் போது, தான் எதிர் கொண்ட நிகழ்வை சொல்ல ஆரம்பிக்கிறான் தபேஸ். லக்னோவிற்கு கிளம்பும் அன்றைய பொழுது, ஃபெலுவிற்கும் ஒருவித ஆர்வம் தொற்றிக்கொண்டிருந்தது. அழகான நகரம் அவர்களுக்கு மறக்க முடியாத சம்பவங்களை அள்ளி தர இருக்கின்றது என யாரும் அறிந்திருக்கவில்லை.

தொடக்கப்புள்ளி, ஔரங்கசீப்பின் விலைமதிப்பற்ற மோதிரம். பல மனிதர்கள் கதையில் தலையிட, அதில் ஒரு மருத்துவருக்குப் பழமையான பொருட்களை சேகரிக்கும் ஒரு மனிதரால் வெகுமதியாக கொடுக்கப்பட்டதே அந்த மோதிரம். ஒரு தனியார் மிருகக்காட்சி சாலைக்கு அருகில் அமைந்த அந்த டாக்டரின் வீட்டில் இருந்து அந்த மோதிரம் களவாடப்படுகிறது.

அங்கிருந்தே பெலுடாவின் துப்பறியும் படலம் தொடங்குகிறது. மோதிரம் அங்கிருந்த பலரை ஈர்ப்புக்கு உள்ளாக்கி இருந்தது. குழப்பங்கள் அதன் சேவையைச் சிறப்பாக்கி பல கேள்விகளை முன் நிறுத்திவிடுகிறது. மோதிரம் எங்கு போனது? “கவனமாக இரு” என்று அவ்வப்போது ஃபெலுவிற்கு வந்த எச்சரிக்கை யாரிடமிருந்து? கை பெட்டியோடு தோன்றி மறைந்த சாது யார்? மோதிரத்தின் உரிமையாளர் சாகும்போது சொன்ன “spy” என்ற வார்த்தை எதைக் குறிப்பிடுகிறது? மிருகக்காட்சி சாலையில் இருந்த பூட்டப்பட்ட கதவிற்குப் பின்னால் மறைக்கப்பட்டது எது? திகைப்பூட்டும் வரலாற்றுத் தகவல்களுடன் ஃபெலுடா துப்பறியும் இந்த கதை உங்களை மீண்டும் ஒரு முறை, பல முறை என வாசிக்க வைக்கும்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #satyajit ray #feluda #maharajavin modhiram

want to buy : https://www.udumalai.com/maharajavin-mothiram.htm

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: