அடிப்படைக் கணக்குகள்

நம் அன்றாட வாழ்வில் கணிதத்தின் பங்கு இன்றியமையாதது. வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்கள் வாங்குவதிலிருந்து நாட்டிற்குத் தேவையான பட்ஜெட் போடறது வரைக்கும் கணக்கு நம்ம எல்லாருக்கும் தேவை. அதனால தான் பள்ளிப் பாடங்களையும் தாண்டி, போட்டித் தேர்வுகளில் கூட கணக்கு முக்கியமான பங்கு வகிக்கிறது.

எண்ணியலின் மூலமான அளவைகளில் ஆரம்பித்து, லாப-நட்டக் கணக்குகளைக் கடந்து, அளவியலில் சற்று அளவளாவி, இயற்கணிதத்தைக் கொஞ்சம் சுவைத்து, தர்க்க அறிவைப் பயன்படுத்தி சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளது “அடிப்படைக் கணக்குகள்”. ஃபார்முலாக்களை எளிய முறையில் புரிய வைத்துக் கணிதத்தின் மகத்துவத்தை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும்படி எழுதியிருக்கிறார் புத்தகத்தின் ஆசிரியர் ரகுநாத் அவர்கள். சில நுணுக்கமான வழிமுறைகளின் மூலம் எளிய வழியில் கணக்குகளை விவரித்து நுட்பமாகக் கணக்கைக் கையாண்ட விதம் பாராட்டத்தக்கது.

கணித உலகில் கண்டுபிடிக்கப்பட்ட சில முக்கிய தகவல்களை பெட்டி செய்திகளாகக் கொடுத்திருப்பது படிப்பவர்களுக்கு கணிதத்தைப் பற்றி மேலும் ஆர்வத்தைக் கூட்டும் வகையில் அமைந்துள்ளது.

கணக்கு என்றதுமே எட்டிக்காயைப் போல் கசப்பவர்களுக்கு இப்புத்தகம் ஒரு வரப்பிரசாதம்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #mragunath #adippadai kanakkugal #basic mathematics #competitive exam #formula #trics #tnpsc

want to buy : call author to buy this book

contact no : M.Ragunath-9942086120

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: