இங்கேதான் இறப்பார்கள்

“தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படாமல் நல்லவர்களே எப்போதும் தண்டிக்கப்படுவது காலத்தின் கட்டாயம்..”

ஒரு கொலைக் கேஸைப் பற்றி கோகுல்நாத்துடன் பேசிக்கொண்டு வந்த  விவேக், கூவம் பாலத்தின் மேல் ஒரு கும்பல் கூடியிருப்பதைப் பார்த்துவிட்டு தன்னுடைய யமஹாவை ஓரமாக நிறுத்தினான். பாலத்தின் கீழே இருந்தது ஒரு மனிதனின் உயிரற்ற உடல். மிகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருந்த அவனது முகத்தில் எந்த உறுப்புமே இல்லை. தற்கொலை கேஸாக இருக்கும் என்ற கோகுல்நாத், பாடிக்கு அருகே  இருந்து விவேக் எடுத்த தடயத்தைப் பார்த்தவுடன் தன் முடிவை மாற்றிக்கொண்டார்.

அதே நேரத்தில் காட்போர்ட்ஸ் கம்பெனியின் எம்.டி வாசுதேவனும் அவருடைய மகன் முகேஷும் ப்ளாக்கில் பொருளை வாங்க மும்பையிலிருந்து வந்திருந்த பார்ட்டி வேவு பார்க்க வந்த சிபிஐ ஆபிசர் என்பது தெரியாமல் மாட்டிக் கொண்டு முழித்தனர். வந்திருந்த ஆபிசர் அதிகமாய் லஞ்சம் கேட்டு அவர்களை மிரட்ட, மிரண்ட இருவரும் அவனைக் கொல்லத் திட்டமிடுகின்றனர். கூலிப்படையைச் சேர்ந்த ஒருவனை கூப்பிட்டு காரியத்தை முடிக்க இருந்த நேரத்தில் அந்த ஆபிசர் பற்றிய ஒரு உண்மை தெரியவந்த போது இருவரும் திடுக்கிட்டனர்.

கூவம் பாலத்தில் கிடைத்த டெட்பாடி யாரென அடையாளம் காணப்பட்டதா? விவேக்கிற்கு கிடைத்த தடயம் என்ன? சிபிஐ ஆபிசரை, வாசுதேவனும் முகேஷும் கொன்றனரா? சிபிஐ ஆபிசரைப் பற்றித் தெரிய வந்த உண்மை என்ன? விவேக் கொலையாளியை நெருங்கினாரா? இருட்டில் பூனையைத் தேடுவது போல் இருந்த கேஸில் விவேக்கிற்கு வெளிச்சம் கிடைத்ததா? விஸ்வரூபம் எடுத்த கேஸை அசால்ட்டாக அணுகிய விவேக் வென்றது தனிக் கதை.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #ingethan irappargal

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=370

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: