#8 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. இவர் அக்டோபர் 2, 1904-ல் பிறந்தவர்.
  2. இவர் இந்தியாவின் பிரதம அமைச்சர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர்.
  3. 1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் போது இந்தியாவை இக்கட்டான சூழலில் இருந்து காப்பாற்றியவர்.
  4. “ஜெய் ஜவான் ஜெய் கிஸான்” என்பது இவரின் வீர முழக்கம்.
  5. இந்திய தேசிய காங்கிரஸின் மூத்த தலைவர்.
  6. காந்தியக் கொள்கைகளைத் தீவிரமாகப் பின்பற்றுபவர். அதனால் இவர் இறந்த பின் காந்தியடிகளை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே இவருடைய உடலும் அடக்கம் செய்யப்பட்டது.
  7. பதவியில் இருந்தபோது வெளிநாட்டில் இறந்த ஒரே இந்தியப் பிரதமர்.
  8. இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடிய முக்கிய விடுதலைப் போராட்ட வீரர்களில் ஒருவர்.
  9. மேரி கியூரியின் வாழ்க்கை வரலாற்றை இவர் இந்தியில் மொழிபெயர்த்தார்.
  10. இவர் இறப்பிற்கு பின் 1966-ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி இவரை கௌரவித்தது.

இந்தப் பத்து கேள்விகளும் ஒரு நபரைக் குறிக்குது. முடிஞ்சா தேடிக் கண்டுபிடிங்க! முடியாதவங்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க!!

உங்க பதிலைக் கமெண்ட்ல போடுங்க..

மேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #challenge #general knowledge #quiz

One thought on “#8 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

Add yours

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: