மெலூஹாவின் அமரர்கள்

மெலூஹா! உன்னத வாழ்வை உணர்ந்த தேசம்..

மெலூஹாவில் வாழும் மக்கள் சூர்யவம்சிகள். சூரியனின் வழிவந்த அரசர்களின் மக்கள். நேர்மையானவர்கள். அரசின் கோட்பாடுகளையும் சட்டதிட்டங்களையும் மதித்து வாழ்பவர்கள். தீமையின் பிடியிலிருந்து தங்களைக் காப்பாற்ற முக்கியமான ஒருவரை எதிர்பார்த்துக் காத்திருக்கும் மெலூஹர்களிடம் வந்து சேர்கிறார், சிவன். சோமரஸத்தின் உதவியால் நீலமாக மாறிய சிவனின் கழுத்து.

நீலகண்டர்..

தீமையை அழித்துத் தங்களை உய்விக்க வந்த கடவுளாகவே சிவனைக் கருதும் சூர்யவம்சிகள் சிவனிடம் உதவியை எதிர்பார்க்கின்றனர். கடவுளாகவே இருந்தாலும் காதல் வயப்படுவது இயல்பே. சதி என்ற பேரழகியின் மீது காதல் வயப்படுகிறார். காதல் திருமணத்தில் முடிகிறது. தன்னுடைய கடந்த காலத்தின் குற்றவுணர்ச்சியின் காரணமாக சூர்யவம்சிகளுக்கு உதவ முன்வருகிறார் சிவன். தங்களுடைய தீமையாக சந்திரவம்சிகளை சிவனுக்கு அடையாளம் காட்டுகின்றனர். சந்திரவம்சிகள்..சூர்யவம்சிகளுக்கு எல்லா விதத்திலும் எதிர்மறையான மனிதர்கள். சோமரஸம் தயாரிக்கும் மந்திர மலைத் தாக்குதல்..உயிர் நண்பனான பிரகஸ்பதியின் மரணம்..விளைவு..சந்திரவம்சிகளுக்கு எதிரான ஸ்வத்வீபத்தின் மீதான போர். போரின் முடிவில் தான் அழிக்க வேண்டிய தீமை சந்திரவம்சிகள் அல்ல என்பது சிவனுக்கு தெரிய வந்தது. கதையின் ஆரம்பத்தில் இருந்து கருப்பு அங்கியணிந்த ஒரு உருவம் சிவனையும் சதியையும் தொடர்ந்து வருகிறது.

மூன்று பாகத்தில் முதல் பாகமான மெலூஹாவின் அமரர்கள் கதையின் இறுதியில் சதிக்கு மிக அருகில் கையில் கத்தியுடன் கருப்பு அங்கியணிந்த நாகா..சதியைக் காப்பாற்ற முற்படும் சிவன்..என முடிந்திருப்பார், அமீஷ். இதைப் படித்துவிட்டு முதல் பாகத்தைப் படிக்க ஆரம்பியுங்கள்..

அமீஷ் அவர்களின் முதல் புத்தகமே பெரும் பாராட்டுக்குரியதாகவும் அனைவரும் விரும்பும் வகையிலும் இருப்பது அவருக்கு கிடைத்த வெகுமதி. இந்தப் புத்தகத்தை பவித்ரா ஸ்ரீனிவாசன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

காத்திருங்கள்! இரண்டாவது பாகம் நாகர்களின் ரகசியம்!!

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one_minute_one_book #tamil #book #review #epic #shiva #triology #amish_tripathi #immortals_of_meluha #meluhavin_amarargal #pavithra_srinivasan

want to buy : https://www.panuval.com/meluhaavin-amararkal-10003522

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: