23-வது ஜன்னல் – Crime Novel

“யாருக்கும் தெரியாது என்று நாம் நம்பும் ஒரு விஷயம், நமக்கே தெரியாமல் சில சமயம் வேறொருவருக்கும் தெரிந்திருக்கலாம்..”

“கொடுத்து கெடுப்பானுக்கும் கெடுத்து கொடுப்பானுக்கும் நடுவில்

பருந்து மூக்கின் எல்லைக்கப்பால்

அஞ்சில் ஒன்றின் வழியினிலே

இருபத்து ஏழில் இருபத்து மூன்றாவது அதிபதியின்

கீழே ஆறடி இருட்டினிலே

காண்மின் கோடி கோடி

பசும்பொன்… நவ மாணிக்கம்.”

ஐஸ்வர்ய பெருமாள் கோவிலில் கிடைத்த புதையல் பற்றிய தாமிரத் தகட்டை நவநீத பட்டர் எடுத்துக் கொடுத்தபோது, ஆர்க்கியாலஜி டிபார்ட்மெண்ட்டில் டைரக்டராக இருந்து ஓய்வு பெற்ற சீதாபதியின் கண்கள் அகலத் திறந்தன. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களும் அதன் பெருமைகளும் அவருக்கு அத்துப்படி. தாமிரத் தகட்டையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு அந்தப் பாடலின் முழு அர்த்தமும் புரிந்தது. ஆனால், பட்டரிடம் தனக்கு இந்தப் பாடலைப் புரிந்து கொள்ளக் கொஞ்சம் அவகாசம் கேட்டார். அந்த நேரத்தில் அவருடைய வீட்டிற்கு வந்தது போலீஸ்.

சீதாபதியின் தம்பியான டாக்டர் பஞ்சாபகேசன் ஒரு பெண்ணைக் கொலை செய்து, தலையை மட்டும் வெட்டி எடுத்துவிட்டு, உடலை யாருக்கும் தெரியாமல் மார்ச்சுவரியில் மறைத்து வைத்ததாக அவர் மேல் புகார் வந்தது. மிரண்டுபோன சீதாபதி தன் தம்பியின் மீது யாரோ பொய்க்  குற்றச்சாட்டு சொல்வதாகக் போலீஸிடம் கூற, நம்பாத போலீஸ் அவரைக் கைது செய்ய முயல்கிறது. மந்திரியிடம் உதவி கேட்டு தன்னுடைய தம்பியைக் காப்பாற்றும் சீதாபதிக்கு அந்தக் கொலைக்கு பின்னால் இருந்த உண்மை லேட்டாகத் தான் தெரியவந்தது.

ஐஸ்வர்ய பெருமாள் கோவிலில் இருந்த அந்தப் புதையல் சீதாபதிக்குக் கிடைத்ததா? அந்தப் பெண்ணைக் கொலை செய்து மார்ச்சுவரியில் மறைத்தது யார்? தாமிரத் தகட்டின் முழு அர்த்தமும் புரிந்த சீதாபதி பட்டருக்கு உரிய பங்கைக் கொடுத்தாரா? கடைசி நேரத்தில் சீதாபதிக்கு தெரிந்த விஷயம் அவருடைய தம்பியைக் கொலைப்பழியிலிருந்து காப்பாற்றியதா? மேலும் பல தரமான சம்பவங்களுடன் உங்கள் கைகள் திறக்கட்டும் அந்த “23-வது ஜன்னல்”.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #23-vadhu jannal

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=264

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading