#3 மூளைக்கு வேலை!!

  • 10 மீட்டர் உயரமான ஒரு சுவரில் ஒரு நத்தை ஏறுகிறது. ஒரு நாளைக்கு 3 மீட்டர் ஏறினால், 2 மீட்டர் சறுக்கிக் கீழிறங்குகிறது. அது சுவரின் உச்சியை அடைய எத்தனை நாள் செல்லும்?
  • சென்னை மாநகரத்திலே திருவாளர் கவுண்டமணி ஆறு அறைகள் கொண்ட ஒரு வீடு கட்டி, அந்த ஆறு அறைகளையும் ஒவ்வொரு குடும்பத்திற்கு வாடகைக்கு விட்டிருக்கிறார். முதல் மாதம் ஒவ்வொரு குடும்பத்திடமும் ரூபா 10 வீதம் மொத்தம் 60 ரூபா வாடகையாக வாங்கிவிட்டார். தனது வீட்டிற்குத் திரும்பி வந்ததும், தான் சற்றுக்கூடுதலாக வாடகை வாங்கிவிட்டதாக ஒரு பச்சாதாப உணர்வு. எனவே, தான் வாங்கி வந்த 60 ரூபாவில், 10 ரூபாவை எடுத்து தனது நண்பர் உசிலைமணியிடம் கொடுத்து, குடியிருப்பாளர்கள் ஆறு பேருக்கும் பங்கிட்டு வழங்கும் படி கொடுத்தார். உசிலைமணி 10 ரூபாவைப் பங்கிடுவதில் இருக்கும் சிரமத்தை எண்ணி, அதில் 4 ரூபாவை தான் எடுத்துக்கொண்டு, மிகுதி 6 ரூபாவை ஒவ்வொரு ஒவ்வொரு குடியிருப்பாளருக்கும் ஒவ்வொரு ரூபாயாக வழங்கிவிட்டார். இப்போது குடியிருப்பாளர்கள் ஒவ்வொருவரும் 9 ரூபா வாடகை கொடுத்திருக்கிறார்கள். ஆக மொத்தம் 54 ரூபா. உசிலைமணி எடுத்துக்கொண்ட பணம் 4 ரூபா. மொத்தம் 58 ரூபாவாகிறது. அந்த இரண்டு ரூபாவிற்கு என்னவாயிற்று? யாரிடம் அது உள்ளது?

இந்த இரண்டு கேள்விகளும் கிராமப்புறங்களில் மனக்கணக்காக கேட்கப்படுபவைகளாகும். இதை முயற்சி செய்து பாருங்கள். உங்கள் திறனைக் கணக்கிட்டுக்கொள்ளுங்கள்.

#one minute one book #tamil #book #review #aptitude #quiz #puzzle #riddle

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: