நெடுநல்வாடை

சங்கத் தமிழ் இலக்கியங்களில் பத்துப்பாட்டின் கீழ் வரும் ஒரு சிறிய, அழகிய நூல் “நெடு நல் வாடை”.

வடக்கிலிருந்து வரும் காற்று ‘வாடை’ என்றழைக்கப்படும். ‘நெடு’ என்பது நீண்ட நாளையும், ‘நல்’ என்பது நல்லது என்பதையும் குறிக்கிறது. அளவுக்கு அதிகமான குளிர் அடிக்கிறது, அதை மக்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பதையும், அரண்மனையில் தனியாக இருக்கும் தலைவி, போருக்கு சென்றிருக்கும் தலைவனை எண்ணி அவனைப் பிரிந்த துயரத்தில் இருக்கிறாள் என்பதையும் மிக அழகான வரிகளில் வார்த்தைகளைக் கோர்வையாக்கி வரிகளை நெய்திருப்பார் இந்நூலின் ஆசிரியர் மதுரைக் கணக்காயர் மகனார் நக்கீரனார். இந்நூலிற்கு உரை எழுதியவர் என்.சொக்கன்.

‘நெடுநல்வாடை’ எனப் பெயர் வரக் காரணம்..

இதற்குப் பல காரணங்கள் சொல்கிறார்கள். எனக்குப் பிடித்த விளக்கம் இது: காதலர்கள் சேர்ந்திருக்கும் நேரத்தைவிட, பிரிந்திருக்கும்போதுதான் அவர்களுக்கு இடையிலான அன்பு ஆழமாகும் என்று சொல்வார்கள். அந்தவகையில், வாடைக்காற்று அவர்களுக்கு ‘நல்’லதும் செய்கிறது. ஆகவே, ‘நெடு’+’நல்’ வாடை! வெறும் 188 அடிகளில் அன்றைய தமிழகத்தைப்பற்றியும் மக்களின் வாழ்வியல்பற்றியும் பல நுட்பமான விவரங்களை இதில் தெரிந்துகொள்ள முடிகிறது.

                                                         -என்.சொக்கன்.

இந்தப் புத்தகத்தின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #free tami ebooks #n.chokkan #nedunalvadai

drive link : https://drive.google.com/open?id=1KW6Yiv16W9F3gGqxAB9p6iatjHEtJ0wt

source link : http://freetamilebooks.com/ebooks/nedunalvadai/

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: