இங்கு பஞ்சர் போடப்படும்

பைக்கு..பறபற..காரு..பறபற..லாரியே..பறன்னு எங்க பாத்தாலும் காரு, பைக்கு, லாரி, குட்டி யானைன்னு புகைய தள்ளிட்டு போயிட்டும் வந்துட்டும் இருக்கு. பரபரப்பான நம்ம வாழ்க்கையில இன்ஜின் பொருத்தப்பட்ட இந்த இரும்பு குதிரைகள் தவிர்க்கமுடியாததா இருப்பதாலேயே, கண்டிப்பா வாகனங்கள் சார்ந்த அனுபவங்கள் நிறைய  வந்து போயிருக்கும். இது எல்லாத்தையும் கலந்துகட்டி போட்ட கதைங்க தான் “இங்கு பஞ்சர் போடப்படும்”.

மோட்டார் விகடனில் புதிய முயற்சியாக வெளிவந்த நகைச்சுவைக் கதைகளின் தொகுப்பு இப்புத்தகம். அராத்து பற்றி சொல்லியே ஆகவேண்டும். இச்சம்பவங்களை நேரில் கண்ட அனுபவத்தைப் போல் பல்வேறு நவீன உவமைகளைக் கையாண்டு வயிறுவலிக்க சிரிக்க வைக்கிறார். வண்டியை சர்வீஸ் விட்டா நம்ம ஸ்பேர் பார்ட்ஸயும் கழட்டிட்டு விற்றுவாங்கலோனு வர்ற பயத்தைப் பத்தியும், தவறிப்போய் நண்பன் கையில வண்டியைக் கொடுத்துட்டு என்னாகுமோன்னு கண்ணுல விளக்கெண்ணை வைத்து காத்திருக்கும் மறக்க முடியாத தருணங்களையும் அழகாக விவரிக்கிறார். ஒவ்வொரு கதையின் முடிவிலும் வாழ்வியல் நீதி கூறப்பட்டிருக்கும். அது கதையை மேலும் அர்த்தமுள்ளதாக்கிவிடும்.

அதில் ஒன்று..

“என்ஃபீல்டு புல்லட் வாங்கிக் கொடுத்தால்தான் கல்யாணம் பண்ணுவேன் என சொல்லிவிடுங்கள். கழுத்துக்கு வந்தது என்ஃபீல்டோடு போய்விடும்” என்பது போன்ற திறன் வாய்ந்த வாகனம் தொடர்பான வாழ்வியல் தந்திரங்களை போதித்துவிட்டு இந்தப் புத்தகம் அடுத்த கியருக்குப் போய்விடும்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #motor vikatan #araathu #ingu puncture podapadum #comedy #fun

want to buy : https://www.panuval.com/ingu-panchar-podapadum-10002171

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: