குறித்துவைத்துக் கொல்!

“பொய் சில நேரம் உண்மைக்குத் தூண்டில் போடும்..”

காதல், சினிமா, அரசியல் பற்றிய காரசாரமான கேள்விகளுக்கு பதில் அளித்து பேட்டியை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்ப முயன்ற பிரபல  நடிகை சாருபாலாவின் செல்போன் சிணுங்கியது. அரசியல் ஒரு செப்டிக் டேங்க் எனப் பேட்டியளித்த நடிகை சாருபாலாவை, பெயர் தெரியாத ஒரு அரசியல் கட்சியின் பிரமுகர் போன் செய்து மிரட்டுகிறான். வீட்டில் தன்னுடைய பேட்டியைப் பார்த்து, தனக்கு ஆரத்தி எடுத்து அம்மா வரவேற்பாள் என்று எதிர்பார்த்திருந்த சாருபாலாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. உள்ளே சென்று பார்த்தபோது அவளுடைய அப்பாவையும் அம்மாவையும் யாரோ கொலை செய்திருப்பதை அறிந்த சாருபாலாவின் முகத்தில் அதிர்ச்சி.

கொலைக்களத்திற்கு விரைந்த விவேக்கிற்கு, சாருபாலாவின் பெற்றோர்கள் விஷஊசி போட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்று போலீஸ் சொல்ல, இருவரும் தற்கொலை செய்து கொண்டனர் என விவேக் பேப்பருக்கு பேட்டி கொடுக்கிறார். இந்தத் தகவலறிந்த நான்கு பேர் செல்போனில் சந்தோசமாகப் பேசிக்கொள்ள அவர்களைப் பிடித்து விசாரிக்கிறார் விவேக். விசாரணையில் உண்மையான குற்றவாளி அவர்கள் அல்ல என்பதை உணர்ந்த விவேக், கேஸின் இன்னொரு பக்கத்தைப் புரட்டுகிறான். இதற்கிடையில் மாறுவேடத்தில் தன்னுடைய வக்கீலைப் பார்க்கச் சென்ற சாருபாலா ஒரு விபத்தில் இறக்கிறாள்.

கொலை ஏன் தற்கொலையாக விவேக்கால் மாற்றப்பட்டது? சாருபாலா இறந்தது விபத்தா? கொலையா? போனில் மிரட்டிய அரசியல் பிரமுகர் யார்? இந்தக் கொலைக்கு பின்னணி பழிவாங்கலா? சாருபாலா ஏன் மாறுவேடத்தில் செல்ல வேண்டும்? வழக்கமான திருப்பங்களுடன் வித்தியாசமான முறையில் நிகழும் சம்பவங்கள் படிப்பவர்களின் மனதை பதைபதைக்க வைக்கும்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #vivek #rajeshkumar #kurithuvaithu kol

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=691

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: