“புன்னகை புரியுங்கள். நாளை இதை விட மோசமாகத் தான் இருக்கும்..
ஒவ்வொரு தீர்வுமே ஒரு பிரச்சினைக்கு வழிகாட்டி..
உங்களுக்கு முன்னால் வரிசையில் நிற்பவர் மட்டுமே இருப்பவர்களிலேயே அதிக நேரம் எடுத்துக் கொள்வார்..
சிறுவர்களுக்கான நிகழ்ச்சிகளை வயோதிகர்கள் தான் விரும்பிப் பார்ப்பார்கள்..
மாட்டிக் கொள்ளாத வரை எதுவுமே தவறில்லை..”
லவ்வுல ஆரம்பிச்சு லைஃப் முடியற வரைக்கும் இடைப்பட்ட காலத்துல மனிதனோட அன்றாட வாழ்க்கையில அவனுக்கு தேவைப்படற(கொஞ்சம் நல்லா ஆக்ஸிஜனை இழுத்துட்டு வாசிக்க ஆரம்பிங்க) டெக்னாலஜி, கம்ப்யூட்டர், காமர்ஸ், ரியல் எஸ்டேட், வார், காப்ஸ், மிலிட்டரி போலீஸ், போட்டோகிராபி, நர்ஸ், பஸ், கௌபாய், லாட்டரி, கார், டாட்லர்ஸ், கிராபிக்ஸ் டிசைன், அம்மா, ஸ்கௌட், பொலிட்டிகல், கோல்ப், எம்ப்ளாயீஸ், ஆபீஸ், மியூசிக், ஹார்ஸ், மார்ஷியல் ஆர்ட்ஸ், யப்பா மூச்சு திணறுதுல்ல..நியூட்டன் விதிகளைப் போல வாழ்வியல் நடைமுறை சாத்தியங்களை வெச்சு உருவாக்கப்பட்ட விதிகள் தான் இந்த மர்பி விதிகள், நம்மை எல்லாம் சிந்திக்க வைக்கும் எதிர்மறை விதிகள். நம்மளோட அன்றாட வாழ்க்கையில நமக்கு கிடைக்கிற அனுபவங்களைத் தான் “மர்பி விதிகள்” என்ற பெயரில் ‘மர்பி’ என்பவர் தொகுத்துள்ளார்.
இந்த ‘மர்பி’ங்கறவர் யாரு..? எதுக்காக இதையெல்லாம் சொல்லிட்டு போனாரு..? இத்தனை விதிகளையும் கண்டுபிடிச்சு சொன்ன அவரே தான்,
“இந்த விதிகளைத் தெரிந்து வைத்திருப்பதால் உங்களுக்கு ஒரு பயனும் ஏற்படப் போவதில்லை..”ன்னும் சொல்லிட்டு போயிட்டாரு.
மின்சார மீட்டர்களைப் பழுது பார்த்து வந்த எட்வர்ட் மர்பி என்பவர் 1918-ஆம் ஆண்டு பிறந்தவர். மின்சார மீட்டரில் ஏற்பட்ட ஒரு தவறுக்கு அவரது உதவியாளரைக் காரணம் காட்டி சொன்னதே “தவறு செய்வதற்கான வாய்ப்புகள் இருந்தால் அவன் கண்டிப்பாகத் தவறு செய்வான்” (If that guy has anyway of making a mistake, he will) முதல் மர்பி விதியாக உலகளவில் இன்றளவும் பார்க்கப்பட்டு அனைவராலும் பின்பற்றப்படுகிறது.
மர்பி எழுதிய விதிகளைப் பார்க்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும். வாசகர்களின் வசதிக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் மர்பி விதிகள் கொடுக்கப்பட்டுள்ளது.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #quotes #murphy’s law #tamil #english #s.rathinagiri
drive link :
Tamil : https://drive.google.com/open?id=1rdbQw6bOizLeD6Swnamtsn5U1bSy7JKw
English : https://drive.google.com/open?id=1T184Ztbz3zhs9UhiOQGlGdO38kAtzYZ2
Drop your Thoughts