‘நேனோ தொழில்நுட்பம்தான் அறிவியலின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கப் போகிறது’
-டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்காலம்
10-9 என்பது ஒரு நேனோ மீட்டர். அளவில் மிகச் சிறிய நுணுக்கமான கட்டமைப்புகளைக் கொண்டு செயல்படும் பருப்பொருள்களை வடிவமைப்பதே நேனோ தொழில்நுட்பம். தற்போது வளர்ச்சி பெற்று வரும் துறையான நேனோ வருங்காலத்தில் மிகப் பெரிய சாதனைகளைப் படைக்க உள்ளது. மருத்துவம், உணவு உற்பத்தி, எரிபொருள், விண்வெளி, மின்சாரம் தயாரித்தல், விவசாயம், சுத்தமான குடிநீர், வானிலை மாற்றம், திடக்கழிவு மேலாண்மை, விளையாட்டு மற்றும் டெக்ஸ்டைல்ஸ் போன்ற பல துறைகளும் எதிர்காலத்தில் நேனோ தொழில்நுட்பத்தைச் சார்ந்தே இருக்கும். இழந்த ஒரு உறுப்பை உருவாக்குவதிலிருந்து போருக்கு ரோபோட்டுகளை அனுப்புவது வரை நேனோ இல்லாமல் மனித உயிர்களே இல்லை. பாக்டீரியாக்களை நேனோ முறையில் பிளாஸ்டிக்காக உருவாக்கி சுற்றுச்சூழல் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்.
நேனோவை பயன்படுத்தி கேன்சர் நோயைக் குணப்படுத்த முடியுமா? விவசாயத் துறையில் நேனோ தொழில்நுட்பத்தின் பங்கு என்ன? மின்சார உற்பத்திக்கு எவ்விதம் உதவுகிறது? நேனோ தொழில்நுட்பத்தில் தங்கம் அதிகமாகப் பயன்படுத்தப்படுவது ஏன்? இந்தியாவில் இத்தொழில்நுட்பத்தின் சாதனைகள் என்ன? மூர் விதிக்கும் நேனோ தொழில்நுட்பத்திற்கும் உள்ள தொடர்பு? இதுபோன்று உங்கள் மனதில் எழும் பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் “100/100 அறிவியல்:நேனோ தொழில்நுட்பம்” என்ற இப்புத்தகத்தை ஆயிஷா இரா.நடராசன் எழுதியுள்ளார். கேள்வி-பதிலாக இருப்பதால் புரிந்து கொள்வதற்கு எளிதாகவும், தகவல்களை உடனுக்குடன் நினைவு கூறவும் வசதியாக இருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #era.natarasan #100/100 ariviyal : nano tholilnutpam #nanotechnology #science #question-answer #information
Drop your Thoughts