மகாகவி பாரதியின் முப்பெரும் பாடல்களில் ஒன்று, கண்ணன் பாட்டு. பண்டையக் காலத்தில் இறைவனைத் தலைவனாகவும், மற்ற பிற உயிர்களைத் தலைவியாகவும் பாவித்து இறைவன் ஒருவனே அவனை அடையும் மற்ற உயிர்களைப் பற்றி பாடல்களை எழுதி வந்தனர். புதுமை விரும்பியான மகாகவி பாரதி தன்னைத் தலைவனாகவும், இறைவனைத் தலைவியாகவும் பாவித்து பாடல்களைப் பாடியிருக்கிறார் மகாகவி. இவ்வாறு இறைவனாகிய கண்ணனைத் தன் தோழனாகவும், தாயாகவும், தந்தையாகவும், சேவகனாகவும், சீடனாகவும், விளையாட்டுப் பிள்ளையாகவும், காதலனாகவும், காந்தனாகவும், ஆண்டானாகவும், கண்ணம்மாவைத் தன் குழந்தையாகவும், காதலியாகவும், குலதெய்வமாகவும் கருதி பாடல்களை எழுதியிருப்பார் மகாகவி.
மொத்தமாகக் கண்ணன் பாட்டு 23 பாடல்களைக் கொண்டது. இதில் கண்ணன் என் காதலன் என்ற தலைப்பின் கீழ் 5 பாடல்களும், கண்ணம்மா என் காதலி என்ற தலைப்பின் கீழ் 6 பாடல்களும் மகாகவியால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளால் தொடுக்கப்பட்டிருக்கும். கண்ணன் பாட்டு என்னும் தலைப்பில் எழுதப்பட்ட பாடல்களில் உள்ள சொற்கள் மிக எளிமையாக பாரதியால் கையாளப்பட்டிருக்கும். பாடல்களுக்கேற்ற ராகங்களும் தாளங்களும் கொடுக்கப்பட்டிருப்பது மேலும் சிறப்புக்குரியது.
UPSC மெயின்ஸ் தேர்வில் தமிழை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தவர்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருக்கும் நூல் மகாகவி பாரதி அவர்கள் எழுதிய கண்ணன் பாட்டு.
இந்தப் புத்தகத்தை வாசிக்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #upsc #syllabus #bharathiyar #kannan pattu
drive link : https://drive.google.com/open?id=1Xe-52kYFpfmfbnaekp573JYIl6-WGX7p
Leave a Reply