அமானுஷ்யன்

இந்தப் பதிவை நீங்கள் வாசிக்கும் நாள் நல்ல நாளாக அமையட்டும்..எங்கள் பாதையின் 100-வது பதிவு இது..எங்கள் மீதான உங்கள் அபிமானத்திற்கு மிக்க நன்றி..மேலும் இந்தப் பதிவு எனது வாசிப்பின் போது என்னை வியப்பூட்டிய நாவலைப் பற்றியது..வாசியுங்கள்! வியப்புறுங்கள்!! மேலும் உங்கள் ஆதரவை நாடும் நான்..

                                                               -புத்தகம்

குண்டடி பட்டு மயக்க நிலையில் இருந்த அவன், இமயமலைச்சாரலில் உள்ள அந்த புத்த விஹாரத்தின் மீது விழுந்தான். அவனுக்கு சிகிச்சையளித்த மூத்த பிக்கு அவன் சாதாரணமானவன் அல்ல என்பதை அவனுடைய நடவடிக்கையிலிருந்தே உணர்ந்தார். கண் முழித்த அவனுக்கு தன்னைப் பற்றி எதுவுமே ஞாபகத்துக்கு வரவில்லை, தன் பெயர் உட்பட. அந்த புத்த விஹாரத்திற்கும் அவனைத் தேடி ஆபத்து வருகிறது. மேலும் தான் அந்த இடத்தில் இருந்தால் பிக்குகளுக்கு தான் பிரச்சினை என்றுணர்ந்த அவன் அங்கிருந்து வெளியேறி தன்னைப் பற்றி தெரிந்துகொள்ள முனைகிறான். வழியில் ஒரு பெண்ணின் குழந்தையை அவன் காப்பாற்ற, அவனுடைய நிலையை அறிந்த அவள் பதிலுக்கு அவனுக்கு உதவி தன்னுடைய வீட்டிலேயே இடம் தர முன்வருகிறாள். தன்னைச் சுற்றி ஆபத்து இருப்பதை சுட்டிக்காட்டிய அவன் சிறிது நாளில் அங்கிருந்து வெளியேறி அவனைத் தேடி அலைபவர்களைக் கண்காணிக்கத் தொடங்குகிறான். அவனைக் கொல்ல நினைப்பவர்கள் அவனை ‘அமானுஷ்யன்’ என்று அழைக்கின்றனர்.

சிபிஐ அடிஷனல் டைரக்டரின் கொலையை விசாரிக்க வந்த ஆனந்த், சிறுவயதில் காணாமல் போன தன்னுடைய தம்பி அக்ஷயைக் கண்டுபிடிக்கிறான். ஏற்கனவே அமானுஷ்யனைப் பற்றிப் படித்திருந்த ஆனந்த்திற்கு தன்னுடைய தம்பிதான் அந்த அமானுஷ்யன் என்பதை அறிந்த பிறகு அவனைப் பற்றி பெருமைப்படாமல் இருக்க முடியவில்லை. அமானுஷ்யன் என்ற பெயர் அவனுக்குப் பொருத்தமானதே என்பதை அறிந்த ஆனந்த், ஆபத்தின் பிடியில் இருக்கும் அவனைக் காப்பாற்றத் துடிக்கிறான். தனக்கு தூண்டில் போட ஆனந்த் பொய் சொல்வதாக நினைக்கும் அமானுஷ்யன், ஆனந்த்திடம் தன்னைப் பற்றிய உண்மையைத் தெரிந்துகொண்ட பிறகு இருவரும் சேர்ந்து திட்டமிட்டு அக்ஷய்க்கு கடந்த காலத்தை ஞாபகத்துக்குக் கொண்டு வர முயற்சிக்கின்றனர். முயற்சி தோல்வியில் முடிய, அவர்கள் தன்னைக் கொல்வதற்கான காரணத்தைத் தேடி அலைகிறான் அக்ஷய். திடீரென சில விஷயங்கள் அவனுக்கு ஞாபகம் வர உண்மையைக் கண்டுபிடிக்க ஜம்முவிற்கு செல்கிறான். ஜம்முவில் இருந்த அந்த புத்த விஹாரத்தில் அவனுடைய கடந்த காலம் நினைவுக்கு வர, நடக்கவிருக்கும் வெடிகுண்டுத் தாக்குதலைத் தடுக்க ஆனந்த்திடம் முயற்சி எடுக்க சொல்கிறான்.

அக்ஷய் சிறு வயதிலேயே தன் குடும்பத்தைப் பிரிந்த காரணம் என்ன? அமானுஷ்யன் என்று அவனை அழைக்கக் காரணம் என்ன? அக்ஷய் தான் அமானுஷ்யன் என்பதை ஆனந்த் எப்படி கண்டுபிடித்தான்? கடைசியில் அந்த வெடிகுண்டுத் தாக்குதல் தடுக்கப்பட்டதா? என்ன மனிதனிவன் என்று அனைவரும் அமானுஷ்யனை நினைக்கக் காரணம் என்ன? அமானுஷ்யன் அந்த கொலைக்கும்பலிடமிருந்து தப்பித்தானா? சிபிஐ டைரக்டருக்கும் அமானுஷ்யனுக்கும் உள்ள தொடர்பு என்ன? இதுபோன்ற உங்களுடைய அடுத்தடுத்த கேள்விகளுடன், விசித்திரமான ஒரு மனிதனின் வாழ்க்கையைத் திரும்பத் திரும்ப வாசிக்கத் தூண்டுவதற்குக் காரணம் என்.கணேசன் உருவாக்கிய ஒரு மர்ம நபர் “அமானுஷ்யன்”.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #n.ganesan #amanushyan #suspense #thriller

want to buy : https://www.amazon.in/அமானுஷ்யன்-N-Ganesan/dp/9381098247/ref=sr_1_7?qid=1568893255&refinements=p_27%3AN.Ganesan&s=books&sr=1-7

One thought on “அமானுஷ்யன்

Add yours

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: