பென்னர்கட்டாவில் உள்ள சாஃப்ட்வேர் கம்பெனியின் கட்டிடம் வெடுகுண்டு வைத்து தகர்க்கப்பட்டது. காரணம், ப்ளாக் ஃப்ளேம்ஸ் என்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த தீவிரவாத இயக்கம் என்றும், அந்த இயக்கத்தைச் சேர்ந்த கோப்பெருந்தேவி என்ற பெண்ணைக் கைது செய்துள்ளதாகவும் தமிழ்நாட்டு டி.ஜி.பி ஹரிஹரசுதனுக்குப் போன் செய்த பெங்களூர் டி.ஜி.பி கெம்பண்ணா தகவல் தெரிவித்தார். அப்படியொரு இயக்கமே தமிழ்நாட்டில் இல்லை என்று மறுத்த டி.ஜி.பி ஹரிஹரசுதன், மேற்கொண்டு வெடிகுண்டு விபத்தைப் பற்றி விசாரிக்க க்ரைம் பிராஞ்ச்சை சேர்ந்த அகிலன் என்பவரை பெங்களூருக்கு அனுப்பி வைத்தார்.
வெடுகுண்டு வைத்தவர்கள் தமிழ்நாடு தீவிரவாதிகள் இல்லை என்பதைக் கண்டுபிடித்த அகிலன், பொய் சொன்ன டி.ஜி.பி கெம்பண்ணாவை கண்காணிக்க ஆரம்பித்தான். கெம்பண்ணா ‘லோட்டஸ் ஈட்டர்’ பற்றிய உண்மையைச் சொன்னபோது அதிர்ந்து போனான் அகிலன். மேலும் சாஃப்ட்வேர் கம்பெனி இருந்த இடத்தின் கீழே ஒரு பாதாள அறை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பாதாள அறையை போலீஸ் சோதனையிட்ட போது சுவரில் தீட்டப்பட்ட அழகான வண்ண ஓவியங்களும், காட்டு மிருகங்களின் தலைகளும் பார்வைக்கு கிடைக்க அந்த மிருகத் தலைகளுக்கு நடுவில் மனிதத்தலை விகாரமாய் விழித்துப் பார்த்தது. இந்த விவகாரங்களுக்குப் பின்னணியில் இருந்த ஜமீன் பரம்பரையைச் சேர்ந்த ஒரு முக்கிய பிரமுகர்.
கோரமாக விழித்த அந்தத் தலைகளுக்கு சொந்தக்காரர்கள் யார்? இது நரபலி சம்பந்தப்பட்ட விவகாரமா? சாஃப்ட்வேர் கம்பெனிக்கு வெடிகுண்டு வைத்தவர்கள் யார்? ‘லோட்டஸ் ஈட்டர்’ என்பது எதைக் குறிக்கிறது? ஜமீனின் மறைக்கப்பட்ட வரலாறு என்ன? இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலைச் சுடச்சுட நாவலை வாசித்து தெரிந்துகொள்ளுங்கள்.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #jamuna jakirathai
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=201