1) இந்த நாடு ஜூன் 30, 1960-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்தது.
2) இந்த நாட்டின் முந்தைய பெயர் ஸைர்(Zaire)
3) இந்த நாடு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ளது. உலகின் மிகப்பெரிய 11-வது நாடு.
4) இந்த நாட்டின் தலைநகர் கின்ஷஸா. இதுவே இந்த நாட்டின் மிகப்பெரிய நகரம்.
5) இங்குள்ள மழைக்காடுகளில் மனிதக் குரங்கு, மலை கொரில்லா, ஒகபி, வெள்ளைக் காண்டாமிருகம் போன்ற அரிய விலங்கினங்கள் காணப்படுகின்றன.
6) இந்த நாட்டில் பாயும் நதி ஆப்பிரிக்க கண்டத்தின் இரண்டாவது நீளமான நதி. இந்த நதியின் பெயரே இந்த நாட்டின் பெயர்.
7) ஆட்சி மொழி பிரெஞ்சு என்றாலும் ஸ்வாஹிலி மொழியைப் பெரும்பாலானோர் பேசுகிறார்கள்.
8) இயற்கை வளம் கொட்டிக்கிடக்கும் நாடு. நிலையற்ற அரசாங்கக் கொள்கைகள் முன்னேற்றத்திற்குத் தடையாய் இருக்கின்றன.
9) முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் – வைரம், செம்பு, கச்சா எண்ணெய், காபி, கோபால்ட்
10) 2001-ம் ஆண்டிலிருந்து இந்த நாட்டின் குடியரசுத் தலைவராக ஜோஸப் கபிலா இருக்கிறார்.
இந்தப் பத்து கேள்விகளும் ஒரு நாட்டைக் குறிக்குது. முடிஞ்சா தேடிக் கண்டுபிடிங்க! முடியாதவங்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க!!

கமெண்ட்ல உங்க பதிலைப் போடுங்க..
மேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #challenge #general knowledge #quiz
சரியான விடை – காங்கோ
Correct Answer – Democratic Republic of Congo
Congo, I searched though 😁
Yes, Congo is correct answer… good job…