யமன்தக் – 9 தலைகளும் 34 கைகளும் கொண்ட திபெத்திய கடவுள். ஃபெலுடாவும், தொப்ஷேவும் மியூசியத்தில் யமன்தக் சிலையைப் பார்த்தபோது அதன் தோற்றம் இருவருக்கும் சற்று கலக்கமாகத்தானிருந்தது.

யமன்தக் – திபெத்திய கடவுள்(Yamantaka)
இந்த முறை இருவருக்கும் விடுமுறை சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் தொடங்கியது. யமன்தக் சிலையை வைத்திருந்த ஷெல்வான்கரைச் சுற்றி பல மர்ம பின்னல்கள் இருந்தது. விபத்துக்குள்ளாகி ஷெல்வான்கர் இறந்த பிறகு அவரிடம் இருந்த அந்த திபெத்திய கடவுள் சிலை மாயமாக மறைந்து போனது. விபத்து சம்பந்தமாக பலருக்கு பலவிதமான கேள்விகளும், சந்தேகங்களும் இருந்தது. விபத்திற்குக் காரணம் மலையில் இருந்து உருண்டு வந்த ஒரு பாறை எனவும், அதில் டிரைவர் மட்டும் உயிர்பிழைத்ததும், சிலை மாயமானதும் தான் பலரின் சந்தேகத்திற்கு இடமளிப்பதாக இருந்தது. வழக்கம்போல ஃபெலுடாவின் டிடெக்டிவ் மூளை பதில் தேடும்போது, சில புகைப்படங்கள் கிடைக்கின்றன. அதில் விபத்தின் கதை வெளிவருகிறது. சந்தேகப்படலம் விரிகிறது. துப்பறிதல் தொடங்குகிறது. இந்த முறை ஃபெலுவின் லாஜிக் தவறுகிறது. எதிர்பாராத பல திருப்புமுனைகளை கொண்டது, யமன்தக்கின் கதை.
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #satyajit ray #feluda #gangtokil vandha kashtam
want to buy : https://www.commonfolks.in/books/d/gangtokil-vandha-kashtam
Leave a Reply