புத்தக வாசிப்பு வெகுவாக குறைந்துவரும் நம் காலத்தில் பெரும்பாலான நேரம் ஸ்மார்ட் போனுடனே செலவு செய்கிறோம். வாசிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கத்தோடு நம்மைச் சுற்றி பல முயற்சிகள் பலர் எடுத்தாலும் நம் பார்வை தொடுதிரையை விட்டு விலகுவதாக இல்லை. அடுத்த பெரும் முயற்சியாக மீண்டும் வாசிப்பை மேம்படுத்த காகிதப் புத்தகங்கள் பெரும்பாலனவை மின் புத்தகங்களாக மாற்றம் செய்யப்பட்டும், இணையத்தில் வெளியிடப்பட்டும் வாசிப்பின் மீதான கவர்ச்சியை ஈர்க்கும் முயற்சிகள் நடந்துகொண்டு தான் இருக்கின்றன. இருந்தும் மீம்ஸ், வதந்தி போன்ற கேலிக்கூத்துகளுக்கு கிடைக்கும் வரவேற்பு கூட வாசிப்புக்கு ஏனோ கிடைப்பதில்லை. ஆனாலும் முயற்சிகள் ஓய்வதில்லை, கடலலைகள் போல.
கீழடி பதிப்பகம்..
இப்பதிப்பகம் மின்னூல்களை மட்டுமே தன் வெளியீடாகக் கொண்டு செயல்படுகிறது. 2017-ல் இருந்து முகநூல் பக்கம் ஒன்று தொடங்கப்பட்டு பல எழுத்தாளர்களின் அபிமானங்களுடன் பல சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், க்ரைம் கதைகள், குழந்தைகளுக்கான கதைகள் போன்ற பல களங்களில் 50-க்கும் மேற்பட்ட நூல்கள் மின்னூல்களாக மட்டும் வெளியிடப்பட்டுள்ளது. இந்நூல்களை Google Play Books-ல் இலவசமாக வாசிக்கலாம். இதற்கு தேவை மின்னஞ்சல் முகவரியை login செய்வது மட்டுமே. இதற்கான செயலியும் (app), Google Play Store மற்றும் App Store-லும் கிடைக்கும். சுவாரஸ்யமான பல நூல்களை வாசிக்க தொடுதிரை மூலமாகவே உங்களை வந்து சேரும் வண்ணம் கீழடி பதிப்பகம் எடுக்கும் புதிய முயற்சி இது. வாசிப்பை சுவாசியுங்கள்..!

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #free books #keezhadi publications
Facebook link : https://www.facebook.com/e.keezhadi/
Drop your Thoughts