ஹரிதா ஒரு ஆச்சரியக்குறி! – Crime Novel

“உண்மையான காதலை மனிதர்களால் மட்டுமல்ல, அறிவியலாலும் பிரிக்க முடியாது..”

தன் கல்யாணத்துக்காகப் பார்த்து வைத்திருந்த இரண்டு மாப்பிள்ளைகளில் யாரை முடிவுசெய்வது என்ற குழப்பத்திலேயே காலேஜுக்கு போனாள் ஹரிதா. ஆச்சரியம் அளிக்கும் வகையில் அவளுடைய பெயருக்கு ஒரு லெட்டர் வந்திருந்தது. ஹரிதாவுக்கு முன்பின் யாரென்றே தெரியாத ப்ரணேஷ் என்பவன் அந்தக் காதல் கடிதத்தை எழுதியிருந்தான். அதைப் படித்த ஹரிதாவுக்கு பயத்தில் நா வறண்டது. கல்யாணம் நிச்சயமாக இருக்கும் இந்நிலையில் யாரோ விளையாடுகிறார்கள் என்று நினைத்த அவளுக்கு மீண்டும் ஒரு லெட்டர் வந்து அவளை பயமுறுத்தியது. அதில் அவனே நேரில் வந்து ஹரிதாவை சமாதானப்படுத்துவதாக எழுதியிருக்க அதைப் படித்த ஹரிதா மிரண்டாள். நிலைமை இவ்வாறிருக்க பிரெண்ட் ஜெயாவின் கஸின் பிரதர் ஜவஹர் உதவிக்கு வருகிறார்.

ப்ரணேஷைக் கைது செய்து அடித்து விசாரித்தபோதும் அவனும் ஹரிதாவும் காதலர்கள் என்றே சொல்லிக்கொண்டிருந்தான். அவனுக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று எண்ணிய போலீஸ் அவனை டாக்டரிடம் அழைத்து செல்லுமாறு அட்வைஸ் செய்கின்றனர். இதற்கிடையே ஹரிதாவைப் பற்றிய ஒரு உண்மை ஜெயாவிற்கு தெரிய வர, அதை ஜவஹரிடம் தெரிவித்து உண்மை இருக்கும் இடத்திற்கு அனுப்பினாள். அங்கு சென்ற ஜவஹருக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

ப்ரணேஷ் சொல்வது பொய்யா? ஹரிதா சொல்வது பொய்யா? ஜெயாவிற்கு தெரிந்த உண்மை என்ன? ப்ரணேஷ் சொல்வது போல் ஹரிதாவும் ப்ரணேஷும் காதலர்களா? சென்ற இடத்தில் ஜவஹர் கண்டுபிடித்த உண்மை என்ன? உண்மையில் ஹரிதாவுக்கு நேர்ந்தது என்ன? சூடான கேள்விகளுக்கு பதிலாக அறிவியலின் அற்புதம் காத்திருக்கிறது.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #haritha oru aachariyakuri

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=27

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: