உலகில் கொண்டாடப்படும் சிறப்பு தினங்கள்

உலக நாடுகள் அனைத்தும் ஒன்று கூடி ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டி உருவாக்கப்பட்ட சில முக்கிய தினங்கள் அனைத்து நாடுகளாலும் ஏற்கப்பட்டு பொதுவாக சிறப்பு தினமாகக் கொண்டாடப்படுகிறது. சமூகத்தில் நிகழும் சாதி, மதம், இனப்படுகொலை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய விழிப்புணர்வை மக்களின் பார்வைக்குக் கொண்டு வருவதே இந்த தினங்களின் முக்கிய நோக்கமாகும். தினங்களை மட்டும் தனியாகக் குறிப்பிடாமல் அந்தத் தினங்களுக்குரிய காரணங்களும் சிறு குறிப்புகளாகக் கொடுக்கப்பட்டுள்ளது இப்புத்தகத்தின் சிறப்பு. இதில் ஐ.நா.சபை கொண்டு வந்த தினங்களே அதிகமாக உள்ளன. நாடுகளிடையே அமைதியைக் கொண்டுவர எண்ணி உருவாக்கப்பட்ட ஐ.நா.சபை, போரில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிர்த்தியாகம் செய்தவர்களை மனத்தில் கொண்டு வகுத்ததே இந்த சிறப்பு தினங்கள்.

மேலும் பொதுத் தேர்வுகள் எழுதுவோர்க்கு இப்புத்தகம் பயன்பட வேண்டும் என்ற சீரிய நோக்கத்துடன் எழுதியுள்ளார் எழுத்தாளர் ஏற்காடு இளங்கோ.

இந்தப் புத்தகத்தை உடனே வாசிக்க கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும். பகிரவும்..!

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #information #world #important days #yercaud elango

drive link : https://drive.google.com/open?id=1nC1HMNr4z3F7NQByOz18TIgWgKTqaaHy

source link : http://freetamilebooks.com/ebooks/celebrationdaysinworld/

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading