‘கி’(க)லியுகம்! – Crime Novel

மழை பூப்பூவாய்த் தூறிக் கொண்டிருந்த போது வீட்டிற்கு கிளம்பத் தயாரான டாக்டர் மிருத்தியுஞ்சனைப் பார்க்க இரண்டு இளைஞர்கள் அந்த மனநல மருத்துவமனைக்கு வந்திருந்தனர். முன்னிரவு நேரத்தில் வந்த அந்த இரண்டு பேரையும் பார்த்த டாக்டரிடம் காசியே முதலில் பேச ஆரம்பித்தான். தன்னுடைய நண்பன் கலிவரதன் சில நாள்களாக இயல்பாக இல்லாததைத் தெரிவித்த காசி, அவனுடைய ஆன்மிக ஈடுபாட்டைப் பற்றியும் அதனால் அவனுக்கு நேர்ந்த அனுபவத்தைப் பற்றியும் கூறினான். மேலும் கோவிலில் அவன் பார்த்த ஸ்வர்ணதேக ஸ்வாமிகள் என்ற ஸ்வாமியின் உடல் ஜொலித்ததைப் பற்றியும் கூற, அனைத்தையும் கேட்டு முடித்த டாக்டரால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. நண்பனின் இந்த நிலையைக் கண்டு வருந்திய காசிதான் கலிவரதனின் பெற்றோர் சம்மதிக்க ஹாஸ்பிடலுக்கு அழைத்து வந்திருந்தான்.

இயல்பாக பேசிக்கொண்டே இருந்த கலிவரதன் உடனே சித்தர் நிலைக்கு போய் உபதேசம் செய்ய ஆரம்பித்தான். உபதேசம் செய்து முடித்தவுடன் டாக்டரிடம் திரும்பிய கலிவரதன், இது எனக்கு கிடைத்த வரம் இதை சரிசெய்ய நினைத்தால் குணமான அடுத்த நொடியே உங்களுக்கு மரணம் என்று கூற அவர் சற்று மிரண்டுதான் போனார். கோவிலுக்கு சென்று ஸ்வர்ணதேக ஸ்வாமிகள் பற்றி டாக்டர் விசாரித்த போது அது அவரை வியப்பின் விளிம்புக்கே அழைத்துச் சென்றது. ட்ரீட்மென்ட்டை ஆரம்பித்த பிறகு கொஞ்சம் சரியாகி வந்த நிலையில் மீண்டும் அவனிடம் சித்தர் நிலை எட்டிப்பார்த்தது டாக்டரையே குழப்பமடையச் செய்தது. இதற்கிடையில் அவருடைய ஹாஸ்பிடலில் அட்மிட்டாகி இருந்த பத்ரய்யா மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள, நடப்பது எதுவும் புரியாமல் இருந்தார் மிருத்தியுஞ்சன்.

உண்மையிலேயே ஸ்வர்ணதேக ஸ்வாமிகள் என்பவர் யார்? கோவிலில் டாக்டருக்குத் தெரியவந்த உண்மை என்ன? பத்ரய்யாவின் தற்கொலைக்கு காரணம் என்ன? கலிவரதனுக்கும் பத்ரய்யாவுக்கும் என்ன தொடர்பு? கலிவரதனின் சித்தர் நிலைக்கு என்ன காரணம்? வித்தியாசமான கோணத்தில் ஆரம்பித்த கதை விறுவிறுப்புடன் நகர்ந்து படிப்பவர்களை வியக்கவைக்கும்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #kiliyugam

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=1014

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: