மென்மையாய் ஒரு வன்முறை

“பணம் பத்தும் செய்யும், அவ்வளவு ஏன் கொலை கூட செய்யும்..”

மூன்று மாதத்திற்குப் பிறகு விடுமுறையைக் கழிக்க அண்ணன் பாலமுரளி வீட்டிற்கு சேரனில் வந்துகொண்டிருந்த வைசாலி கடத்தப்படுகிறாள். அதிகாலை வேளையில் வைசாலியை அழைத்து வர கிளம்பிச் சென்ற பாலமுரளி விஷ ஸ்ப்ரே மூலமாக மர்ம நபர் ஒருவரால் தாக்கப்படுகிறான். ஹாஸ்பிடலில் அட்மிட் செய்த பிறகு மீண்டும் ஒருமுறை பாலமுரளி மீது கொலை முயற்சி நடக்கிறது. நடப்பது எதுவும் புரியாமல் தவிக்கிறாள் பாலமுரளியின் மனைவி நர்த்தனா.

ஹாஸ்டலில் தங்கியிருந்த வைசாலியின் அறையை போலீசார் சோதனையிட்டபோது கிடைத்த டையரியில் இருந்தது பிரபல ரவுடியின் போன் நம்பர். துணுக்குற்ற போலீசாரின் பார்வையில் வைசாலி குற்றவாளியாகத் தெரிகிறாள். ரயில்வே டிக்கெட் பரிசோதகரிடம் விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு வைசாலி அந்த ரயிலில் வரவில்லை என்பது மேலும் கேஸை குழப்பத்தில் ஆழ்த்தியது.

பாலமுரளியைத் தாக்கியது யார்? வைசாலி கடத்தப்பட்டது பணத்துக்காகவா? வைசாலிக்கும் அந்த ரவுடிக்கும் என்ன சம்பந்தம்? வைசாலி வந்திருக்கவேண்டிய ரயிலில் அந்தப் பெட்டியில் வந்த பெண் யார்? கொலைமுயற்சிக்கான காரணம் முன்பகையா? காரணத்தைத் தெரிந்துகொள்ள இன்றே வாசியுங்கள் ‘மென்மையாய் ஒரு வன்முறை’.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #menmaiyaai oru vanmurai

want to buy : https://www.noveljunction.com/BookInfo.aspx?BookRefId=35

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: