வெக்கை

“The novel questions the ethics of the politics of revenge.”

“கிராமங்கள் தான் நாட்டின் முதுகெலும்பு” இந்த கருத்து ஒரு பக்கம் இருக்க நகரவாசிகளாக நாம் கிராம மக்களை காட்டுமிராண்டிகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் பார்க்கவும், சித்தரிக்கவும் பழகிவிட்டோம். ஆனால், இயற்கையோடு ஒன்றி வாழத்தெரிந்த அவர்களே தமிழினத்தின் தொன்மை, மரபு, விவசாயம், பழக்கம், மனிதம், சாமர்த்தியம், கட்டுப்பாடு, வெறித்தனம் மற்றும் வீரம் சுமப்பவர்கள்.

சிதம்பரம் என்கிற 16 வயது சிறுவனையும் அவன் சுற்றங்களையும் மையமாக வைத்து 1980-களில் நடக்கின்ற கதையே இந்தப் புத்தகம். கிராம வாசனையிலும், பட்டிக்காட்டு பாஸையிலும் ஊறிக்கிடக்கும் நலிந்த மக்கள்மீது, முதலாளிக் கூட்டம் செலுத்தும் ஆதிக்கங்களையும் அதை ஆதரிக்கும் அக்கறையற்ற காவல் சட்டங்களையும் உண்மை மாறாத முகத்தைக் காட்டும் முயற்சி. இம்முயற்சியில் சற்றே கூடிய இரத்தவாசனை.

வடகூரான், சிதம்பரம், ஐயா, ஆத்தா, அண்ணன் என எளிமையான கதாப்பாத்திரங்களைக் கையாண்ட விதம், வழக்கு மொழி உரையாடல், கதைக்களம் ஆகியவை சுவாரஸ்யத்தை விடுத்து புது அனுபவ தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

பணம் கொழுத்தவனை ரோசம் கொண்டு பழிதீர்த்ததால், அதிகார வெயில் கொடுத்த வெக்கையில் புழுங்கும் சாதாரண மக்களின் வாழ்க்கையே பூமணியின் “வெக்கை”. சிதம்பரத்தின் கேள்வியே புத்தகத்தின் கரு.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #thriller #fiction #poomani #vekkai #asuran #vetrimaaran

want to buy : https://www.amazon.in/Vekkai-Modern-Tamil-Classic-Novel/dp/9381969299

One thought on “வெக்கை

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: