துப்பறியலாம் வாங்க!!!

விபத்து அல்லது கொலை நடந்த சம்பவ இடத்திற்கு விரையும் போலீஸார் முதலில் தேடுவது தடயங்களை தான். நடந்த சம்பவம் இயற்கையானதா? இல்லை யாரவது இதில் சம்பந்தப்பட்டிருப்பார்களா? என்ற கோணத்தில் தான் அவர்களது தேடல் இருக்கும். தற்கொலையாக இருக்கும் பட்சத்தில் ஃபைல் க்ளோஸ். அதுவே கொலையாக இருந்தால், சம்பந்தப்பட்ட சம் எக்ஸ்-ஐத் தேடி கேஸ் நகரும். நிறைய டிடெக்டிவ் கதைகளை படிக்கும்போது நாமளே கூட கதையில கொலையாளியைக் கண்டுபிடிக்கும்போது சின்னதா ஒரு சந்தோஷம் வரும். உண்மைய சொல்லணும்னா துப்பறியறதுங்கறது அவ்வளவு ஈசியான வேலை கிடையாது. உணர்ச்சி வேகத்துல செய்யற கொலையை விட, திட்டம் போட்டு செய்யற கொலைகளைக் கண்டுபிடிக்கிறது தான் இங்க சவாலான விஷயம். அதையெல்லாம் உண்மை சம்பவங்களின் மூலமா சொல்றது தான் ராம்குமார் எழுதிய ‘துப்பறியலாம் வாங்க’. துல்லியமான தடயங்களே கிடைக்காதபோது, டெக்னாலஜியைப் பயன்படுத்தி குற்றவாளியை ஈசியா நெருங்க முடியும். என்னதான் டெக்னாலஜி வளர்ந்துட்டு வந்தாலும், அதுக்கு சமமா குற்றங்களும் அதிகரிச்சிட்டே வர்றது தான் வருத்தத்திற்குரியதா இருக்கு.

மேலும் இந்தப் புத்தகத்தை இலவசமாக வாசித்து நீங்களும் துப்பறியும் நிபுணராக கீழே உள்ள லிங்க்கை க்ளிக் செய்யவும்.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #detective #ramkumar #thuppariyalam vaanga

download link : https://drive.google.com/open?id=1t2UmDnItMBtGFWomCnVN521ipa6ypqdL

source link : http://freetamilebooks.com/ebooks/let-us-detect/

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: