ஐந்து கிராம் நிலவு

வருடம் 2049..உணவாக மாத்திரையும், கடவுளாக பிரதமர் தேஜ்ஜும் மக்களுக்கு பழக்கப்படுத்தப்பட்டு இருந்தனர். பிரதமரை எதிர்த்து கேள்வி கேட்பவர்களை எதிரிகளாக எண்ணி சுட்டுப் பொசுக்கினர். மேலும் வெறி பிடித்த ரோபோட்டுகளை எதிர்ப்பவர்கள் மீது ஏவிவிட்டனர். நடப்பதை எல்லாம் பார்த்து கொதித்துப் போயிருந்த சிலர் அந்த இயக்கத்தில் சேர்ந்து பிரதமருக்கு எதிராக அவருக்குத் தெரியாமல் மறைமுகமாக வேலை செய்தனர். பாரி, சோலை, காசி, அகில் மற்றும் திலக் அந்தக் காவலாளிகளிடம் இருந்து தப்பித்து தாங்கள் கேள்விப்பட்ட விசயம் உண்மையா என்பதை அறிய சகாதேவ் வீட்டிற்கு சென்றனர்.

வேறொரு கோளின் நிலவில் உள்ள மண்ணை மனிதர்களுக்கு உணவில் கலந்து கொடுத்து தன் இஷ்டப்படி அவர்களை ஆட்டிவைக்க எண்ணியிருந்தார் பிரதமர் தேஜ். அந்த மண்ணை உணவில் கலந்து உண்டால் கோபம் என்ற உணர்ச்சியே இல்லாமல் மந்தபுத்தியோடு மக்கள் இருப்பார்கள் என்றறிந்த அந்த இயக்கத்தினர் தேஜ்ஜின் மீது கொலைவெறியோடு இருந்தனர். இதை உடனே மக்களுக்குப் புரிய வைக்க விரும்பி திட்டத்தை செயல்படுத்த ஆரம்பித்தனர். அந்த ஐந்து கிராம் நிலவு திட்டம் இருக்கும் இடத்தை வெடிவைத்து தகர்த்து அதை இல்லாமல் செய்து விட நினைத்த அவர்கள் கூட்டத்தில் அவர்களுக்கே தெரியாமல் இருந்தது ஒரு கறுப்பு ஆடு.

ஐந்து கிராம் நிலவு திட்டம் தகர்க்கப்பட்டதா? மக்கள் உண்மையைத் தெரிந்து கொண்டனரா? இயக்கத்தில் இருந்த கறுப்பு ஆடு எது? விஞ்ஞானத்தில் எதிர்காலத்தில் நிகழவிருப்பதை நிகழ்காலத்திலேயே நம் கண்முன் கொண்டு வந்திருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #ainthu gram nilavu

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=724

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: