#12 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. இவர் ஏப்ரல் 29, 1891-ஆம் ஆண்டு புதுவையில் பிறந்தார்.
  2. இவர் தமிழாசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
  3. கண்டழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன் போன்ற பல புனைபெயர்கள் இவருக்கு உண்டு.
  4. தந்தை பெரியாரின் தீவிரத் தொண்டர்.
  5. மரணத்திற்குப் பின் இவருடைய படைப்புக்காக சாகித்ய அகாடமி விருது பெற்றார்.
  6. சௌமியன் என்ற நாடகத்தை எழுதியவர்.
  7. இவரை கவுரவிக்கும் விதமாக திருச்சியில் இவரது பெயரில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
  8. கவிஞர், எழுத்தாளர், அரசியல்வாதி, திரைப்படக் கதாசிரியர் என்று பன்முகம் கொண்டவர்.
  9. இவர் குயில் என்னும் திங்களிதழை நடத்தி வந்தார்.
  10. திருக்குறளின் பெருமையை விளக்கி இவர் 5 கட்டளைக் கலித்துறைப் பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்தப் பத்து கேள்விகளும் மிகவும் பிரபலமான ஒரு நபரைக் குறிக்குது. முடிஞ்சா தேடிக் கண்டுபிடிங்க! முடியாதவங்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க!!

கமெண்ட்ல உங்க பதிலைப் போடுங்க..

மேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #challenge #general knowledge #quiz

2 thoughts on “#12 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: