ருத்ரவீணை

“தென்னாடுடைய சிவனே போற்றி!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!”

அன்று!

300 வருடங்களுக்கு முன்பு..கண்களில் தேஜஸ், தளர்ந்த நடை, தோளில் சுமை, அதில் பெருமை வாய்ந்த வீணையுடன் தஞ்சாவூர் வீதிகளில் தோடிபுரத்திற்கு வழிதேடி அந்த இஸ்லாமியர் அலைந்து கொண்டிருந்தார். நாத அதிபதி தோடீஸ்வரன் குடிகொண்டிருக்கும் வறண்ட பூமியாக இருந்த தோடிபுரத்தை வந்தடைந்த அந்த மாயாஜால மனிதரை அனைவரும் பாபா என்றழைத்தனர். அவர் சுமந்துவந்த வீணை சாதாரண வீணை அல்ல, அந்தப் பரமனே தனது இணையான உமையை வைத்து உருவாக்கிய ருத்ரவீணை. ருத்ரவீணையை தோடீஸ்வர சன்னதி சேர்க்க வந்த அவருக்கு கோவிலுக்குள் நுழைய மதம் ஒரு தடையாக மாறியதோடு அவர் தாக்கப்பட்டார். தாசி அபராஜிதா அடைக்கலம் அளிக்க தோடிபுர வரலாறு மாற்றி எழுதப்பட்டது.

இன்று!

கடந்த சில நூற்றாண்டுகளாக வேறெந்த ஊரும் இல்லாத அளவிற்கு செழிப்பாக விளங்கியது தோடிபுரம். அதேபோல் விடைதெரியாத அமானுஷ்ய நிகழ்வுகளும் வழக்கத்தில் இருந்தது. சுடுகாட்டு வாசனைக்கு மத்தியில் யாரும் போக பயப்படும் தாசி பங்களாவுக்கு இரவில் லாந்தருடன் தனியாக சென்றுவரும் தாசி சுந்தராம்பாள். ருத்ரவீணையைத் தேடி 300 வருட சகாப்தத்தை மீண்டும் திறக்கும் நரசிம்மபாரதி. நடுநடுவே கேட்கும் இனிய வீணை நாதம். வெள்ளிக்கிழமைகளில் தோடீஸ்வரன் சன்னதியில் வாக்கு சொல்லும் சுந்தராம்பாள். 300 வருடமாக ஓலைச்சுவடியைப் பாதுகாக்கும் ஒரு நாகம். ருத்ரவீணையை மீட்ட அடுத்த ருத்ரனைத் தேடும் தோடிபுரம்.

பாபாவின் வருகையால் தோடிபுரம் சந்தித்த மாற்றம் என்ன? ருத்ரவீணை தோடீஸ்வரனிடம் சேர்க்கப்பட்டதா? ருத்ரவீணையைத் தேடிவந்த நரசிம்மபாரதியின் நோக்கம் என்ன? யார் அந்த ருத்ரன்? தாசி சுந்தராம்பாளுக்கும் தாசி பங்களாவுக்கும் உள்ள தொடர்பு என்ன? இதுபோன்ற கேள்விகள் இந்தப் புத்தகத்தை வாசிப்பவரின் மனதைத் துளைத்து விறுவிறுப்பையும் சுவாரஸ்யத்தையும் கூட்டி ஆன்மிக ரகசியங்களை உடைத்து கற்பனையை நிஜமாகக் கருதவைக்கும் இந்திரா  சவுந்திரராஜனின் “ருத்ரவீணை”.

ருத்ரவீணை என்ற இந்த நாவல் ஐந்து பாகங்களாக வெளியிடப்பட்டது. இது சின்னத்திரையில் தொடராகவும் வெளிவந்தது. மேலும், புத்தகத்தின் முடிவிற்கும் தொடரின் முடிவிற்கும் எந்தவித சம்பந்தமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #rudhraveenai #indira soundarajan

want to buy : https://www.amazon.com/Rudhra-Veenai-Part-1-Tamil-ebook/dp/B07BDLN282

One thought on “ருத்ரவீணை

Add yours

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Blog at WordPress.com.

Up ↑

%d bloggers like this: