பம்பாய் கொள்ளையர்கள்

ஜடாயு எழுதிய பம்பாய் கொள்ளையர்கள் என்ற புத்தகத்தை இந்தியில் படமாக்கவிருப்பதால் லால்மோகன் கங்குலியின் அழைப்பை ஏற்று அவருடன் பம்பாய்க்கு விரைகின்றனர் ஃபெலுடா மற்றும் தபேஷ். கூடவே ஒரு பார்சலை கொடுத்து பம்பாயில் இருக்கும் ஒருவரிடம் சேர்ப்பிக்குமாறு கங்குலியிடம் உதவி கோருகிறார் சன்யால். அங்கு காத்திருக்கும் ஆபத்தை அறியாமல் உற்சாகத்துடன் இருந்த கங்குலியிடமிருந்து பார்சலை வாங்கி சென்றவன் திடீரென கொலை செய்யப்படுகிறான். கொலை செய்யப்பட்ட இடத்தில் கிடைத்தது கங்குலியின் அடையாளக் குறிப்புகள் அடங்கிய ஒரு பேப்பர் கிடைக்க, இங்கிருந்து கதை சூடுபிடிக்கிறது. ஃபெலுடாவின் நீலநிற குறிப்பேட்டுக்கும் வேலை வருகிறது.

நிலைமை இவ்வாறிருக்க படத்தயாரிப்பாளரை சந்திக்க சென்ற கங்குலிக்கு ஒரு போன் வர, அவர் போனை எடுத்ததும் மறுமுனை போன் வைக்கப்பட்டது. இதேபோல் ஹோட்டலில் மறுபடி போன் வர எடுத்த அவரது கைகள் நடுங்கியது. போனில் யாரோ மிரட்ட, மிரண்ட அவர் வெளியில் செல்வதை தவிர்த்து வந்தார். அவர் செல்லும் இடமெல்லாம்  பின்தொடந்து வந்த சென்ட் வாசனை அவரை மேலும் பயத்தில் ஆழ்த்தியது. இதற்கு நடுவில் போலீஸ் விசாரணை என கடும் மனஉளைச்சலுக்கு ஆளாகியிருந்த கங்குலிக்கு கிடைத்தது நானா சாகேப் வைத்திருந்த பழங்கால பெருமை வாய்ந்த நௌலகா நெக்லஸ்.

சன்யால் கொடுத்த பார்சலில் இருந்தது என்ன? கொலை செய்யப்பட்டவன் யார்? கங்குலியிடம் அந்த நெக்லஸ் வந்தது எப்படி? கங்குலிக்கு கொலை மிரட்டல் விடுத்தது யார்? ஃபெலுடாவின் யுக்தி கொலையாளியை பிடிபட வைத்ததா? போன்ற கேள்விகளுடன் பரபரப்பான சூழலில் அமைந்த கதை.

தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #feluda #satyajit ray #bombai kollaiyargal

want to buy : https://www.panuval.com/bombai-kollaikarargal-10008741

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: