“தாய்நாட்டிற்கான துரோகம், பாதகம்..”
“ப்ளாக் ஃபயர்
தட்டாரப் பூச்சி
வேல்
விண்
பரிதி”
சிங்கப்பூரிலிருந்து ப்ளைட்டில் வந்துகொண்டிருந்த பரிதி என்பவனை சந்தேகப்பட்டு அவனிடம் பேச்சு கொடுத்து உண்மையை வாங்க தமிழ் தெரிந்த மானஸாவை அனுப்பி வேவு பார்க்கின்றார் பைலட் வைபவ். மானஸாவும் அந்தப் பரிதியின் கூட்டாளி என்பது தெரியாததால் அவன் கடத்தி செல்ல வேண்டிய பொருள் ஈஸியாக இந்தியா வந்து சேர்கிறது. அந்த விபரீத பொருளைக் கடத்த உதவிய மானஸா நான்கு மாதங்களுக்கு பிறகு ஒரு விபத்தில் மாட்டி, இறப்பதற்கு முன் சில வார்த்தைகளை சொல்லிவிட்டு இறக்கிறாள்.
அதே நேரத்தில் சீஃப் ஜஸ்டிஸ் சந்திர பிரபாவின் மகன் ஜெயவேலை நான்கு மாதங்களாகக் காணவில்லை. தன் மகனைக் கண்டுபிடிக்க விவேக்கிடம் உதவி கோர, ஜெயவேல் அறையிலிருந்து தேடல் தொடங்குகிறது. அவனுடைய அறையை சோதனையிட்ட விவேக்கிற்கு கிடைத்தது அனேக நாடுகளில் தடை செய்யப்பட்ட அரிய மருத்துவ உபகரணம்.
ஜெயவேலுக்கு அந்த உபகரணம் கிடைத்தது எப்படி? பரிதி கடத்தி வந்தது எது? மானஸா கொலை செய்யப்பட்டாளா? இறப்பதற்கு முன் அவள் கூறிய வார்த்தைகள் என்ன?
தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #crime novel #rejeshkumar #karuppu neruppu
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=19
Drop your Thoughts