- மத்தியதரைக்கடலுக்குக் கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு தீவு நாடு இது.
- இதன் தலைநகர் நிக்கோசியா.
- இந்த நாட்டின் கரன்சி யூரோ.
- இந்த நாடு 35.1264°N மற்றும் 33.4299°E அமைந்துள்ளது.
- இந்த நாட்டில் எலுமிச்சை, பார்லி, திராட்சை, காய்கறிகள் போன்றவை அதிகம் விளைகின்றன.
- ஐரோப்பாவின் மிகச் சுத்தமான கடற்கரைகள் இந்த நாட்டில் உள்ளன.
- தன் நாட்டின் வரைபடத்தை தேசியக்கொடியில் கொண்ட நாடு.
- மிகக் குறைவான குற்றங்களே இந்த நாட்டில் நடைபெறுவதால், உலகின் பாதுகாப்பான நாடுகளில் இதுவும் ஒன்று.
- இந்த நாட்டில் உள்ள பாபோஸ் நகரம் உலகப் பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டது.
- இந்த நாட்டின் ஆட்சி மொழிகள் கிரேக்கம் மற்றும் துருக்கியம்.
- செம்பு, கல்நார், ஜிப்சம், மரம், உப்பு, மார்பிள் போன்றவை இந்நாட்டின் இயற்கை வளங்கள்.
- சுற்றுலாவும், துணி ஏற்றுமதியும் இந்நாட்டின் முக்கியத் தொழில்கள்.
- துருக்கி இந்த நாட்டைத் தனது பகுதியாக கூறிப் பின்னர், தனி நாடாக ஏற்றுக்கொண்டது.

இந்தப் பத்து கேள்விகளும் ஒரு நாட்டைக் குறிக்குது.
If you can, find this country..?
மேலும் பல தகவல்களுக்கும், புதிர்களுக்கும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #challenge #general knowledge #quiz
சரியான விடை – சைப்ரஸ்
Correct Answer – Cyprus