பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்கொடுமைகளில் ஆரம்பித்து வரதட்சணை கொடுமை, விவாகரத்து பெற்ற பின் கணவனிடமிருந்து ஜீவனாம்சம் பெறுவதற்கான வழிமுறைகள், முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை? அரசு வேலையில் இருக்கும் கணவன் மரணமடைந்து விட்டால் ஓய்வூதியம் யாருக்கு கிடைக்கும்? RTI போடுவதற்கு கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்ன? இளம் சிறுவர்களுக்கான சட்டங்கள், நுகர்வோருக்கான சட்டங்கள், ரிட் மனு தாக்கல் செய்வது எப்படி? வாரிசுச் சான்றிதழ் பெறுவது எப்படி? இரயில் விபத்து நேர்ந்தால் அரசிடமிருந்து நிவாரணம் பெரும் வழிமுறைகள் என்னென்ன? கைது நடவடிக்கையின் போது குற்றவாளியை போலீஸார் நடத்தும் விதம் மற்றும் கலப்பு திருமணம் செய்பவர்கள் அரசின் உதவிகளைப் பெறுவது எப்படி? போன்றவற்றை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையாகத் தொகுத்துள்ளார், வழக்கறிஞர் ராசா.துரியோதனன்.
சாமானியன் முதல் இந்தியாவின் முதல் குடிமகனான ஜனாதிபதி வரை தவறு செய்பவர்களுக்கான தண்டனைச் சட்டங்களை எளிமையாக எளியோரும் புரிந்து அதை செயல்படுத்தும் விதமாக அமைந்திருப்பது இப்புத்தகத்தின் சிறப்பு.
*தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.
#one minute one book #tamil #book #review #law #fundamental #information #eliyorkkaana sattangal #raasa.dhuriyodhanan
download link : https://drive.google.com/open?id=149wNlGjiCtTKO2-vRLqUsgynjRqLXaJe
source link : http://freetamilebooks.com/ebooks/eliyorkkaana_sattangal/
Leave a Reply