- இவர் டிசம்பர் 22, 1887-ஆம் ஆண்டு இந்தியாவில் பிறந்தார்.
- இவர் 3000-க்கும் அதிகமான கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார்.
- இவரது பெயரால் 1997-ஆம் ஆண்டு இவர் துறை சம்பந்தப்பட்ட ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டது.
- இவர் பிறந்து மூன்று ஆண்டுகள் வரை பேசும் திறன் இல்லாமல் இருந்தார்.
- இவருடைய “மாக் தீட்டா ஃபங்சன்ஸ்” எனும் ஆராய்ச்சி முடிவுகள் சிறப்பான ஒன்றாக இன்றளவும் கருதப்படுகிறது.
- 1918-ஆம் ஆண்டில் லண்டன் ராயல் சொசைட்டியின் உறுப்பினர் ஆனார் (எஃப்.ஆர்.எஸ் பட்டம்).
- கணிதம் தவிர மற்ற எல்லாப் பாடங்களிலும் தோல்வியைத் தழுவிய இவர் ஈரோட்டில் பிறந்து கும்பகோணத்தில் வளர்ந்து இங்கிலாந்து வரை சென்றுள்ளார்.
- இவருடைய வாழ்க்கை வரலாறு The Man Who Knew Infinity என்ற பெயரில் படமாக எடுக்கப்பட்டது.
- இவர் ஏப்ரல் 26, 1920-ஆம் ஆண்டு தன்னுடைய 33 வயது முடியும் முன்னரே இறந்துவிட்டார்.
- எண்கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய உண்மைகள் இன்று பல துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தப் பத்து கேள்விகளும் மிகவும் பிரபலமான ஒரு நபரைக் குறிக்குது. முடிஞ்சா தேடிக் கண்டுபிடிங்க! முடியாதவங்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க!!
கமெண்ட்ல உங்க பதிலைப் போடுங்க..
#one minute one book #tamil #challenge #general knowledge #quiz
The answer is srinivasa ramanujan
சரியான விடை – ஸ்ரீநிவாச ராமானுஜன்
Correct Answer – Srinivasa Ramanujan