சாகாவரம்

மனித இயல்புக்கு மாறாக நடந்ததற்குப் பரிகாரம் தேடிச்சென்ற ஒரு மனிதனை வாழ்வின் இன்னொரு எல்லைக்குக் கொண்டு சேர்த்ததே வெ.இறையன்பு வரித்த சாகாவரம். நீண்ட நாள் உயிரோடு வாழவேண்டும் என்ற ஆசை(!) எனக்கு உங்களுக்கு என நிறைய பேருக்கு இருந்திருக்கும். மரணத்தை வென்றவர்கள் சிலரே. அவர்களில் ஒருவரைத் தான் இங்கு நாம் சந்திக்க இருக்கிறோம்.

சாகாவரம்..

தாவரவியல் ஆசிரியரான நசிகேதனின் மகிழ்ச்சியான வாழ்வைப் புரட்டிப் போட்டது உடனிருந்தவர்களின் அடுத்தடுத்த மரணம். நான்கு மாதங்களில் நான்கு மரணங்களைப் பார்த்திருந்த நசிகேதன் வாழ்வில் மரணத்தின் பயமும் அதன் தாக்கமும் அவனை என்னவோ செய்தது. மனிதனாகப் பிறந்தால் மரணித்து தான் ஆக வேண்டுமா? மரணமில்லாப் பெருவாழ்வைத் தேடிப் புறப்பட்ட அவன் அதை அடைய பல முயற்சிகளும் பயிற்சிகளும் செய்யவேண்டி இருந்தது அவனுக்கு சலிப்பை ஏற்படுத்தாமல் ஆவலை ஏற்படுத்தியது. கொல்லிமலையில் ஒரு ஞானியைச் சந்தித்த நசி மரணமில்லாப் பெருவாழ்வை அடைவதற்கான வழிமுறையை அவர் கொடுத்த ஓலைச்சுவடியிலிருந்து பெற்றான். ஆனால், ஞானி கூறியவற்றை முழுவதுமாக கடைபிடிக்காததன் விளைவை விரைவிலேயே சந்திக்க வேண்டியிருக்கும் என்பதை நசி அறிந்திருக்கவில்லை. நீங்களும் சாகாவரத்தை அடைய நசிகேதனுடன் உங்களுடைய பயணத்தை இனிதே ஆரம்பியுங்கள்..காத்திருக்கிறது வாழ்கையின் இன்னொரு பரிமாணம்..

*தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #saagavaram #v.iraianbu

want to buy : https://www.amazon.in/Saagavaram-V-Iraianbu/dp/8123416474

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: