பயம் மனித உணர்வுகளில் ஒன்று. அட்ரீனலினும், என்டோகிரைனும் ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பயம் பரவும். இருந்தாலும் திகிலடைவதும், பயமுறுவதும் ரசிக்கத்தக்கதாக மாறிவருகிறது.
இரவு 8:30. மேல்பாறை வனப்பகுதியில் நடக்கும் திருவிழாவினை ஆவணப்படம் எடுக்கச் செல்கின்ற நால்வர், தங்கள் திட்டத்திலேயே இல்லாத சில சம்பவங்களை எதிர்கொள்கின்றனர். அமாவாசை இருளில் தொலைந்து போகின்றனர்.
அர்ஜூன்-காவல்துறை அதிகாரி. தனது விசாரணையை மேல்பாறை மக்களிடம் இருந்து தொடங்கினான். “முனி அடித்திருக்கும்” “ஓநாய் கொன்றிருக்கும்” என பல கதைகள் அவனின் தைரியத்தை உலுக்கிப் பார்த்தது. துரதிர்ஷ்டவசமாக அந்த நால்வரில் ஒருவனின் உடலை ஓநாய்கள் கிழித்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
ஊச்சு..என்றால் பயம். நாவலின் ஒவ்வொரு வரியும் சுவாரஸ்யத்தைக் கொடுக்கும். Wrong turn, Saw முதலான படங்களில் வருவது போன்ற தோற்றம் கதையின் உண்மை சாயலை மறைத்துவிடும். இது ஒரு திகில் கலந்த துப்பறியும் கதை… முடிவில் மீட்கப்படும் உண்மை.
#one_minute_one_book #tamil #book #review #crime_thriller #oochchu #aravindh_sachidanandam
want to buy : https://www.amazon.in/%E0%AE%8A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-Oochchu-Tamil-Aravindh-Sachidanandam-ebook/dp/B07L7CLWJ3
can you send me this noval pdf ?
this book available in google books
thank you