#15 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

  1. இந்த நாடு 1973-ல் ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்றது.
  2. உலகிலேயே மிக நீளமான நீருக்கடியில் இருக்கும் குகை லுகாயன் தேசியப் பூங்காவில் இருக்கிறது.
  3. இங்குள்ள காட்டு உயிரினங்கள், அழகிய கடற்கரைகளைப் பார்ப்பதற்காகவே ஆண்டுக்கு 50 லட்சம் மக்கள் இந்த நாட்டிற்கு படையெடுத்து வருகின்றனர்.
  4. 1492-ல் அமெரிக்கக் கண்டத்துக்கு வந்தபோது கிறிஸ்டோபர் கொலம்பஸ் பார்வையில் முதலில் பட்டது இந்த நாடுதான்.
  5. அட்லாண்டிக் பெருங்கடலில் 700 தீவுகளைக் கொண்ட நாடு இது.
  6. இந்த நாட்டின் தலைநகர் நாசோ.
  7. வண்ண உடைகள் அணிந்து, பாரம்பரிய இசை, நடனங்களுடன் கொண்டாடப்படும் விழா ஜான்கனூ.
  8. உலகிலேயே பூநாரைகள் (ஃபிளமிங்கோ) இங்கேதான் அதிகம் இருக்கின்றன. இதுவே இந்த நாட்டின் தேசியப் பறவை.
  9. இளஞ்சிவப்பு மணல் கொண்ட கடற்கரை ஹார்பர் தீவில் இருக்கிறது.
  10. ‘ஆழம் குறைந்த கடல்’ என்பது ஸ்பானிஷ் மொழியில் இந்த நாட்டினுடைய பெயரைக் குறிக்கும்.

இந்தப் பத்து கேள்விகளும் ஒரு நாட்டைக் குறிக்குது.

If you can, find this country..?

#one minute one book #tamil #challenge #general knowledge #quiz

3 thoughts on “#15 கேள்விகள் பல! பதில் ஒன்று!!

Add yours

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: