பட்டம்

நம்மில் பெரும்பாலோர் சிறுவயதில் ஏதோ ஒரு தருணத்தில் தினசரி நாளிதழ்களில் நம்மை நாமே மூழ்கடித்திருப்போம். தொடர்கதைகள், தகவல் துணுக்குகள், அறிவியல் கதைகள், குறுக்கெழுத்துப் போட்டி மற்றும் ஆறு வித்தியாசங்களைக் கண்டுபிடி, மேலும் பல..

சிறுவர்களுக்கான வார இதழ் வரிசையில் ‘பட்டம்’ தனக்கான தனிப்பாதையில். இதில் நாளும் செய்தியும், வெங்கியைக் கேளுங்கள், கணித கற்கண்டு, நீங்களும்-நாங்களும், படக்கதை-பயன்கதை, வெற்றிப்பாதை,இன்தமிழ்-என்தமிழ், கதிர்கனவுகள், இயற்கை நம் நண்பன் என ஒவ்வொரு தொகுப்பிலும் தகவலையும், மலைப்பையும், ஊக்கத்தையும் அளிக்கும் ஒரு தினமலர் வெளியீடு.

ஒவ்வொரு திங்கள் தினமலர் இதழுடனும் இந்தப் பட்டம் இணைப்பு இதழாக வெளிவருகிறது. இது ஒவ்வொரு சக்தியும், அறிவும் மிக்க எதிர்கால வித்துக்களின் வாசிப்புக்கு வசப்பட வேண்டிய ஒன்று.

#one minute one book #tamil #book #review #informative #children magazine #dinamalar #pattam

want to read free : https://www.dinamalar.com/E-malar.asp?ncat=1361

Drop your Thoughts

Up ↑

%d bloggers like this: