- இவர் ஆகஸ்ட் 21, 1986-ஆம் ஆண்டு பிறந்தார்.
- ஜமைக்காவில் பிறந்த இவர் ஒரு தடகள வீரர்.
- 2008-ஆம் ஆண்டு நடைபெற்ற பெய்ஜிங் ஒலிம்பிக்கில் உலக சாதனை படைத்தவர்.
- ஒலிம்பிக் போட்டிகளில் விரைவோட்டத்தில் ஆறு தங்கப் பதக்கங்களை வென்ற முதல் வீரர்.
- இவருடைய ஆங்கில சுயசரிதையில் குறிப்பிடப்பட்ட நினைவுகள், “இறுதிக்கோட்டை அடைய வெகுதூரம் முன்பே நான் வேகத்தைக் குறைக்கத் தொடங்கிவிட்டேன்; சிறிதளவுகூட களைப்படையவில்லை. அப்போதிருந்த நிலையில், மீண்டுமொருமுறை கூட போட்டியைத் தொடங்கி முடித்திருக்க முடியும்.”
- ஜமைக்காவின் உயரிய விருதான தனிச்சிறப்பிற்கான தளபதி(Commander of the Order of Distinction) என்ற பட்டம் இவருக்கு அக்டோபர் 2008-இல் வழங்கப்பட்டது. இதற்கு சான்றாக இவரது பெயருக்குப் பின் “CD” என்ற எழுத்துக்கள் இடம்பெறும்.
- அமெரிக்கக் கல்லூரிகள் பல இவருக்கு தடகளக் கல்வி ஊக்கத்தொகை வழங்க முன்வந்த போது, தன் தாய்நாட்டில் இருப்பதே தனக்கு நிறைவாக இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார்.
- “சிறுவயதில் நான் விளையாட்டைத் தவிர வேறு எதைப் பற்றியும் சிந்தித்ததில்லை” என்று கூறியவர்.
- இவரது பெயருக்கு இடி என்று ஆங்கிலத்தில் பொருள் இருப்பதால், இவரது புனைபெயரும் ‘இடி மின்னல்’ என்றே வழங்கப்படுகிறது.
- ஊக்கமருந்து சோதனைக்கு எப்போதும் தயாராக இருப்பதாக உரக்கக் கூறியவர்.
இந்தப் பத்து கேள்விகளும் மிகவும் பிரபலமான ஒரு நபரைக் குறிக்குது. முடிஞ்சா தேடிக் கண்டுபிடிங்க! முடியாதவங்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க!!
கமெண்ட்ல உங்க பதிலைப் போடுங்க..
#one minute one book #tamil #book #review #challenge #general knowledge #quiz
உசைன் போல்ட்
சரியான விடை – உசேன் போல்ட்
Correct Answer – Usain Bolt