பரம(ன்) ரகசியம்

தன்னைக் கொல்ல வருபவர்களிடமிருந்து தன்னுயிரைக் காத்துக்கொள்ள முடியும் என்ற நிலையிலும் எதிரிகளின் கையினால் உயிரை விடுகிறார், வயதான பசுபதி. பசுபதியைக் கொன்றதன் நோக்கம் அவரிடமிருந்த லிங்கம். அது சாதாரண லிங்கம் இல்லை, ஒளிரும் விசேஷ மானஸ லிங்கம். அண்ணன் பசுபதியின் கடைசி ஆசையான அந்த விசேஷ மானஸ லிங்கத்தை அமெரிக்காவில் இருக்கும் தன் மகன்வழிப் பேரனிடம் ஒப்படைக்க தாத்தா பரமேஸ்வரனுக்கும் பேரன் ஈஸ்வருக்கும் இடையே நிகழும் பாசப்போராட்டம் ஆழ்மன உளவியல் ஆராய்ச்சியாளனான ஈஸ்வரை இந்தியாவிற்கு வரவழைக்கிறது. தன்னுடைய தந்தை குடும்பத்தினரின் அன்பு, பாட்டி ஆனந்தவல்லியுடனான சின்ன சின்ன சண்டைகள், விசாலியுடனான காதல் மற்றும் வெள்ளந்தியான கனபதியுடனான நட்பு  போன்றவை கதையை அடுத்தகட்டத்திற்கு நகர்த்துகிறது. இதற்கிடையே பசுபதியின் கொலையை விசாரிக்க வரும் போலீஸ் அதிகாரி பார்த்தசாரதி. பசுபதி கொல்லப்பட்ட இடத்தில் இருந்த இன்னொரு பிணம். இவர்களின் பின்னணியில் இயங்கும் குருஜி. நடுநடுவே வந்து போகும் அக்னிநேத்ர சித்தர்.

ஈஸ்வரை இந்தியா வரவழைத்த விசேஷ மானஸ லிங்கத்தின் வரலாறு? ஈஸ்வருக்கும் கணபதிக்கும் உள்ள தொடர்பு? கதையின் அடிக்கடி வரும் குருஜி மற்றும் அக்னிநேத்ர சித்தர்? இதுபோன்ற கேள்விகள் மனதில் தோன்றி இந்தப் புத்தகத்தை மீண்டும் மீண்டும் வாசிக்கத் தூண்டும்.

*தேடல் தொடரட்டும் இணைந்திருங்கள் one minute one book உடன்.

#one minute one book #tamil #book #review #paraman ragasiyam #n.ganesan

want to buy : https://www.amazon.in/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-N-Ganesan/dp/9381098212

want to read free : http://enganeshan.blogspot.com/

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: