தாஜ்மஹால் நிழல் – Crime Novel

“காதலுக்காக

காதலே எழுதிக்கொண்ட

ஒரு

காவியம்..”

         -தாஜ்மஹால்.

மறைந்த தன் நெருங்கிய தோழி ஸ்வஸ்திகாவிற்கு அஞ்சலி செலுத்த பண்ணை வீட்டிற்குச் செல்கிறாள் பூஜ்யா. அந்த வீட்டில் கழுத்துடன் வெட்டியெடுக்கப்பட்ட மூன்று பெண்களின் தலை ஒரு திரவத்தில் மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்த அவள் அந்த இடத்திலிருந்து வெளியேறும் முன் போலீஸிடம் காண்பிக்க அதைத் தன்னுடைய மொபைலில் படமெடுத்துச் செல்கிறாள். அங்கிருந்து திரும்பிவந்த பூஜ்யா சிறிது நாட்களிலேயே மனஉளைச்சல் ஏற்பட்டு திடீரென ஒருநாள் இறக்க, இந்த இடத்திலிருந்து விவேக் கேஸுக்குள் நுழைகிறான். இறந்த பூஜ்யா அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் திரும்ப உயிர்பிழைக்க கேஸ் வேறொரு கோணத்திலிருந்து கிளறப்படுகிறது.

ஸ்வஸ்திகா மரணத்தின் பின்னணி என்ன? பூஜ்யாவிற்கு நேர்ந்தது என்ன? மூன்று தலைகளுக்கு உரிய பெண்கள் யார்? பூஜ்யா போலீஸிடம் புகாரளிக்காதது ஏன்? கதையில் மறைந்திருக்கும் மர்மம் உடைபட்டதா என்பதை “தாஜ்மஹால் நிழல்” வாசித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #tajmahal nizhal

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=232

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

Discover more from One Minute One Book

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading