ஹிக்ஸ்-போசான் என்ற நுண் அணு ஆராய்ச்சி சம்பந்தமாக அமெரிக்காவிலிருந்து, சுற்றுலா பயணிகள் என்ற போர்வையில் இந்தியாவின் தமிழகத்திற்கு வரும் நாஸா விஞ்ஞானிகள். ஆராய்ச்சிக்கு பாதுகாப்பு அளிக்கும்படி மேலதிகாரியிடம் இருந்து வரும் உத்தரவை சிரமேற்கொண்டு விவேக் ஏற்பாடுகளைத் துரிதமாக்குகிறான். திடீரென, புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் ஓனரின் ஒரே மகனான கோகுல் ஒரு அதிகாலை வேளையில் ஏழாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ள, கேஸ் விவேக் கைக்கு மாறுகிறது. கோகுலின் இறுதிசடங்குகள் நடந்துகொண்டு இருக்கும்போதே தாய்மாமன் நஞ்சுண்டன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்கிறான். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் “திஸ் ஈஸ் வெரி ரேர் அண்ட் அன்யூஸ்வல்” டெத் என்று வர கேஸ் குழப்பத்தில் தத்தளிக்கிறது.
கோகுல் மற்றும் நஞ்சுண்டன் தற்கொலைக்கு காரணம் என்ன? நாஸா விஞ்ஞானிகளின் நோக்கம் என்ன? தற்கொலைக்குப் பின்னிருக்கும் அறிவியல் உண்மையை அறிந்துகொள்ள இன்றே வாசியுங்கள் “அங்கே…இங்கே…எங்கே..?”
#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #ange inge enge
want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=47