- இவர் 19 பிப்ரவரி 1627-ஆம் ஆண்டு இன்றைய மகாராஷ்டிராவில் பிறந்தார்.
- இவர் மராட்டியப் பேரரசை ஆட்சி செய்த மன்னர்களில் தலைசிறந்து விளங்கியவர். மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவர்.
- சாகாஜி போன்ஸ்லே மற்றும் ஜிஜாபாய் இருவருக்கும் இளைய மகனாகப் பிறந்தவர்.
- இளம் வயதிலேயே வாள் பயிற்சி, வில் பயிற்சி, குதிரையேற்றம் மற்றும் யானை ஏற்றம் போன்றவற்றில் சிறந்து விளங்கினார்.
- இவர் கொரில்லாப் போர் முறையைப் பயன்படுத்தி தன் எதிரிகளை வீழ்த்தினார்.
- இவருடைய ஆட்சிக் காலத்தில் சுமார் 10-க்கும் மேற்பட்ட கோட்டைகளைக் கட்டினார்.
- மிகச் சிறந்த கடற்படை தளத்தை உருவாக்கும் நோக்கம் கொண்ட இவர் “இந்திய கடற்படையின் தந்தை” என்று சிறப்பிக்கப்படுகிறார்.
- இவரை கவுரவிக்கும் விதமாக இந்திய கப்பற்படையின் தி ஸ்கூல் ஆஃப் நேவல் இன்ஜீனியரிங் இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
- சிறுவயதிலேயே இதிகாசங்கள் மற்றும் புராணங்களில் அதீத ஈடுபாடு கொண்டிருந்தார்.
- இரத்தப்பெருக்கு நோயினால் பாதிக்கப்பட்ட இவர் 03 ஏப்ரல் 1680-இல் மறைந்தார்.

இந்தப் பத்து கேள்விகளும் மிகவும் பிரபலமான ஒரு நபரைக் குறிக்குது. முடிஞ்சா தேடிக் கண்டுபிடிங்க! முடியாதவங்க நாளைக்கு வரைக்கும் வெயிட் பண்ணுங்க!!
கமெண்ட்ல உங்க பதிலைப் போடுங்க..
#one minute one book #tamil #challenge #general knowledge #quiz
Leave a Reply