- இரண்டாம் சூர்யவர்மனால் ஆரம்பிக்கப்பட்டு அவரின் மறைவுக்குப் பிறகே இக்கோவில் முழுமை பெற்றது.
- கம்போடியாவில் உள்ள இந்தக் கோவில் இந்து சமய கோவிலாக இருந்து பின்னர் புத்த சமய கோவிலாக மாறியது.
- 12-ஆம் நூற்றாண்டில் யசோதரபுரத்தில் கட்டப்பட்ட இது ஒரு விஷ்ணு கோவில்.
- கம்போடியா நாட்டு தேசியக் கொடியில் இடம்பெற்றுள்ளது இக்கோவில்.
- நகரம் மற்றும் கோவில் இவற்றின் கெமர் மொழிச் சொல்லே இந்தக் கோவிலின் பெயர்.
- உலகின் மிகப்பெரிய மத வழிபாட்டுத் தலம்.
- பிரான்ஸ், ஜப்பான் மற்றும் சீனா போன்ற பல நாடுகள் தற்போது இந்தக் கோவிலைப் பாதுகாக்க பலவகையான பாதுகாப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
- யுனெஸ்கோ உலகப் பாரம்பரிய இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.
- இது முதலில் மாநில கோவிலாகவும், கல்லறை மாடமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
- இக்கோவிலின் உண்மையான பெயர் தெரியவில்லை.

இந்தப் பத்து கேள்விகளும் ஒரு பிரபலமான இடத்தைக் குறிக்குது.
If anyone can, find this place..?
#one minute one book #tamil #challenge #general knowledge #quiz
சரியான விடை – அங்கோர் வாட்
Correct Answer – Angkor Wat