மல்ட்டி-மீடியா எழுத்தாளர்…
படித்தவுடனோ அல்லது கேட்டவுடனோ சிறியதாய் ஒரு புதுமையாகவும், விநோதமாகவும் தோன்றலாம். பல புதுமைகளை கொண்ட ஒரு பன்முக சிந்தனையாளரே இந்த பெயருக்குச் சொந்தகாரர்.
சுஜாதா-எழுத்தாளர்..
சுருக்கமான வரையறைகள்…வேகமான எழுத்துநடை…எதார்த்த கருத்துக்கள் என தனக்கான ஒரு பெயரையும், தனக்கான ஒரு பாணியையும் எழுத்துலகில் அமைத்துக்கொண்ட ஒரு பொறியாளர்.
1965 முதல் S.R .ராஜன் என்ற பெயரிலும், சுஜாதா என்ற பெயரிலும் குறுங்கட்டுரைகளை எழுதி வந்தார். இவரின் அறிவியல் புனைகதைகளுக்கு மக்களிடம் அதீத வரவேற்பு. அறிவியல் இவரது எழுத்துக்களில் சாமானியர்கள் அறிவிலும் ஏறி அமர்ந்து கொள்ளும் அளவுக்கு புரிதல் வெளிப்படுபவையாக இருந்தது…
சிறுகதை…குறுங்கதை…அறிவியல் புனைகதை…நாவல்…அறிவியல் கட்டுரை…திரைக்கதை…வசனங்கள் போன்ற எல்லாவற்றிலும் பூந்து விளையாடியவர்…நாம் ரசித்த சிவாஜி பட வசனங்கள்…எந்திரன் திரைக்கதை இவையாவும் இவர் எழுத்துக்களில் பிறந்ததே…
இவரைப்பற்றிய மேலும் பல தகவல்களை மீண்டும் ஒரு போஸ்ட்டில் பார்ப்போம்..
இவரது கதைகளில் எனக்கு பிடித்தது
கொலையுதிர்காலம், நில்..கவனி..தாக்கு.., என் இனிய இயந்திரா…ஜீனோம்…போன்ற புத்தகங்கள்.
இதுபோல் சுஜாதாவின் படைப்புகளில் உங்களுக்கு பிடித்ததைக் கீழே comment-ல் பதிவிடுங்கள்..
#one minute one book #tamil #book #review #writer #famous #sujatha
Leave a Reply