அருந்ததியும் ஆறு தோட்டாக்களும்

அந்தக் காலை வேளையிலேயே இண்டஸ்ட்ரியலிஸ்ட் திருஞானத்தை சந்திக்க இன்ஸ்பெக்டர் தமிழரசன் வந்திருந்தார். அவருடன் விபரீதமும் கூட வந்திருந்தது. அவர் கொண்டுவந்திருந்த அந்த அபாயகரமான பொருள் அருந்ததி என்று பெயர் பொறிக்கப்பட்ட ஆறு துப்பாக்கி தோட்டாக்கள். அந்த வகையான தோட்டாக்கள் கோயம்புத்தூரிலேயே திருஞானம் மற்றும் அவருடைய மகன் மதன் இருவரிடம் மட்டுமே இருந்தது. மதனிடம் விசாரணை செய்த இன்ஸ்பெக்டர் அவன் பொய் சொல்வதை அவனுடைய பேச்சிலிருந்தே உணர்ந்தார். மேலும் மேலும் பொய் மட்டுமே பேசிக்கொண்டிருந்த மதன் திடீரென போலீஸ் கமிஷனரிடம் சென்று அருந்ததி என்ற பெண்ணைக் காதலித்ததாகவும் அவள் திடீரென இறந்துவிட்டதையும் கூறி, அதற்குக் காரணமானவனைத் தான் சுட்டுக் கொன்றதாகவும் வாக்குமூலம் கொடுத்துவிட்டு போலீஸில் சரணடைகிறான் அவன் பின்னால் பின்னப்பட்டிருக்கும் சதிவலையைப் பற்றி அறியாமலேயே.

#one minute one book #tamil #book #review #crime novel #rajeshkumar #arundhathiyum aaru thottakkalum

want to buy : https://noveljunction.com/Bookinfo.aspx?bookRefId=18

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: