சென்னை புத்தகத் திருவிழா 2020

தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம்(BAPASI) நடத்தும் 43வது சென்னை புத்தகத் திருவிழா ‘கீழடி-ஈரடி’ என்ற தலைப்பில் 09/01/2020 அன்று தொடங்கி 21/01/2020 வரை மொத்தம் 13 நாட்களுக்கு, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் வரலாறு காணாத வகையில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

700-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன், 15 லட்சம் தலைப்புகளில், 2 கோடி புத்தகங்கள் இடம்பெற உள்ளது சிறப்புக்குரியது.

தினமும் மதியம் 3 மணிமுதல் இரவு 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணிமுதல் இரவு 9 மணி வரையும் நடைபெற உள்ளது.

நுழைவுக் கட்டணம் : ரூ. 10.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு அனுமதி இலவசம்.

மெட்ரோ ரயில் மூலம் புத்தகத் திருவிழாவிற்கு வருபவர்கள் பயண அட்டையைக் காண்பித்து இலவச அனுமதி பெறலாம்.

way to chennai book festival 2020

#one minute one book #tamil #book #review #chennai #book festival #2020

Comments are closed.

Up ↑

%d bloggers like this: