கொலையுதிர் காலம்

கணேஷிற்கும் வசந்திற்கும்  குழப்பம் மேலோங்கியிருந்தது. வியாசன் வீட்டில் அரங்கேறிய சம்பவங்கள்,  கொலைகள், கிடைத்த வெற்றுத் தடயங்கள், கணேஷின் தலைக்குள் சில கேள்விகளை உசுப்பியது.

“இவ்வளவும் யார்? எதற்காக செய்கிறார்கள்?

4000 ஹெக்ட்டர் பரப்பு கொண்ட 1 கோடி ரூபாய் (1981-ல்) சொத்துக்காகவா?

அல்லது

வியாசர்களால் கொல்லப்பட்ட  புத்திரவதியின் பழி பிசாசின் லீலையா?”

“விஞ்ஞானமா? பைசாசமா?”

சில காரியங்களை உங்களுக்கு சொல்கிறேன்…காரணங்களை கண்டுபிடிக்க முடியுதான்னு முயற்சி பண்ணுங்க. நீங்களா இருந்தா உங்க அடுத்த நடவடிக்கை என்னவா இருக்கும்?

குமாரவியாசன், அனைத்து சொத்துக்கும் வாரிசான லீனா “ஒரு 17 வயது ஆளை இரண்டாகக் கிழித்துக் கொன்றுவிட்டாள்” என்று சொல்கிறார்.

சில சாத்திய நிகழ்வுகள் குமரவியாசரின் மீதான சந்தேகங்களை எழுப்புகின்றது. அப்போதே அவர் பிசாசினால் கொல்லப்படுகிறார். யாரை அடுத்து சந்தேகப்படுவீங்க..?

இவற்றிற்கு மத்தியில் தற்போது நடக்கும் சம்பவங்கள் 50 வருடம் முன்னதாக கிருஷ்ணமூர்த்தி என்பவரால் அனுமானித்து எழுதப்பட்ட ஒரு புத்தகமாக உங்கள் ரூமில் குறுக்கும், நெடுக்குமாக நகர்வது உங்களுக்கு எந்த மாதிரியான உள்ளுணர்வை உண்டாக்கும்.

ஒவ்வொரு அத்தியாயமும் பல திடீர் திருப்பங்களுடன் நிறுத்தி புத்தகத்தை முடித்திருப்பார் எழுத்தாளர் சுஜாதா அவர்கள்.

இந்த “கொலையுதிர் காலம்” என்ற தலைப்பே நம்மை ஏதோ செய்து விடுகிறது. அதுபோல இந்த நாவல் திகிலை விட சுவாரஸ்யத்தை உதிர்க்கிறது.

#one minute one book #tamil #book #review #horror #novel #sujatha #kolaiyuthir kaalam

want to buy : https://www.udumalai.com/kolaiuthir-kaalam.htm

Leave a Reply

Powered by WordPress.com.

Up ↑

%d bloggers like this: